For Daily Alerts
Just In
அட்லாண்டா, சியாட்டிலில் இந்திய துணை தூதரகம்
நியூயார்க்: அமெரிக்காவில் மேலும் இரண்டு இந்தியத் துணை தூதரகங்கள் அமைக்கப்படவுள்ளன.
அட்லாண்டா மற்றும் சியாட்டில் ஆகிய நகரங்களில் இந்த துணைத் தூதரகங்கள் அமையவுள்ளன. இந்த செய்தியை அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேனன் தெரிவிக்கையில், இந்த ஆண்டே இந்த இரண்டு துணைத் தூதரகங்களும் செயல்பத் தொடங்கும். ஏற்கனவே நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ, ஹூஸ்டன் ஆகிய நகரங்களில் துணைத் தூதரகங்கள் உள்ளன. வாஷிங்டனில் தூதரகம் உள்ளது என்றார் மேனன்.
இதேபோல இந்தியாவில் அமெரிக்க துணைத் தூதரகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் மேனன் தெரிவித்துள்ளார்.