For Quick Alerts
For Daily Alerts
Just In
மருத்துவமனையில் வரதராஜன் அனுமதி - நலம் விசாரித்தார் கருணாநிதி

குறைந்த ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வரதராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வரதராஜனை முதல்வர் கருணாநிதி இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குநரும், உறவினருமான அமிர்தத்தையும் கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்தார்.