For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரத்தன் டாடா பிரதமராக வேண்டும்!

By Staff
Google Oneindia Tamil News

Ratan Tata
- ராஜேஷ் ஜெயின்

அசாதாரண தருணங்களில் அசாதாரண நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. அதுவும் அசாதாரண தலைமையின் கீழ் அது நடந்தால்தான் அவை சாத்தியமாகும்.

மீண்டும் ஒருமுறை இந்திய அரசியல் தலைமை நமக்கு தோல்வியைக் கொடுத்துள்ளது. இரு முனைகளில் நாம் இப்போது நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோரம். ஒன்று தீவிரவாதம், இன்னொன்று பொருளாதாரம்.

பெருகி வரும் தீவிரவாதத் தாக்குதல்களால் இந்தியாவின் உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் சிதறிப் போகும் வாய்ப்புள்ளது. இந்தியாவின் வளர்ச்சி தடைபட்டால், லட்சக்கணக்கான இந்தியர்களின் கனவுகள் தவிடுபொடியாகும் அபாயம் உள்ளது.

இந்த நிலையை நாம் தாண்டி வர வேண்டும் என்றால், மிகப் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது.

மேல் மட்டத்திலிருந்து இந்த மாற்றம் நிகழ வேண்டும். புதிய அரசியல் சக்தியை உருவாக்கும் வல்லமை நம்மிடம் இல்லை. அதற்கான வசதியும் இல்லை. அதற்கு பல ஆண்டுகளாகும்.

நமக்கு இப்போது என்ன தேவையென்றால், என்.எஸ்.ஜி. வீரர்களைப் போல அதிரடியான ஒரு நடவடிக்கை. மும்பை தாக்குதலில் போலீஸார் லத்தியுடன் தடுமாறிக் கொண்டிருந்தபோது மின்னலென வந்து, தீவிரவாதிகளுடன் கடுமையாக சண்டையிட்டு அனைத்தையும் காலி செய்து விட்டு ஹோட்டல்களை திருப்பிக் கொடுத்து விட்டுப் போனார்களே, அதுபோல, ஒரு விரைவான அதிரடியான மாற்றம் தேவை.

அதைச் செய்ய சரியான நபர் ரத்தன் டாடா மட்டுமே. டாடா இங்கேயே இருக்கிறார், உடனடியாகவும் கிடைப்பார். இந்த மாற்றத்திற்காக நாம் பல ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை.

இந்தியாவின் ஜனநாயகத்தில் 3 முக்கிய குழப்பங்கள் அல்லது பிரச்சினைகள் உள்ளன. ஒன்று அரசியல்வாதிகள். அரசியல் துறையை முற்றிலும் தூய்மைப்படுத்த வேண்டியுள்ளது.

2வது அதிகாரவர்க்கம். பிரிட்டிஷ் காலத்து ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்களுடன் உலவிக் கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்துப் போக்கை மூட்டை கட்டி வைக்க வேண்டும் அல்லது கலைத்துப் போட வேண்டும்.

3வது கல்விக்கு அதிக முதலீடு. இது நடந்தால் நிச்சயம் நல்லவர்களை அரசியலுக்குத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் கொண்ட பலரை நம்மால் உருவாக்க முடியும்.

இந்த இடத்தில்தான் ரத்தன் டாடாவை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரிடம் ஐந்து ஆண்டுகள் நாட்டை ஒப்படைக்கலாம். அந்தக் காலத்தை அவரும், அவரது டீமும் திறமையாக பயன்படுத்தி, சிறந்த கொள்கைகள், சிறந்த நிறுவனங்கள், சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு, சிறந்த ஆட்சி ஆகியவற்றைத் தருவார்கள். நிச்சயம் இது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும்.

ரத்தன் டாடா தலைமையிலான அரசு வந்தால் ..

- தேசிய பாதுகாப்பு சிறப்பாக இருக்கும்.

- அடிப்படைக் கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மாறும். நல்ல சாலைகள், அதி வேக ரயில்கள், மின் உற்பத்தி ஆலைகள் எல்லாமே சிறப்பாக மாறும்.

- தரமான கல்விக்கு வழி பிறக்கும்.

- கல்வி நிறுவனங்கள் நேர்மையாகவும், சிறந்த தரத்துடனும் விளங்கும்.

- 6000 புதிய நகரங்கள் உருவாகும்.

வித்தியாசமான சிந்தனைகளும், விவேகமான தீர்மானங்களும்தான் இப்போதைய முக்கிய தேவை.

பாஜகவும், காங்கிரஸும் தங்களது மோதல்களை மறந்து, ரத்தன் டாடாவையும், 300 தரமான எம்.பிக்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முன்வர வேண்டும்.

ராகுல் காந்தியும், நரேந்திர மோடியும், மாயாவதியும் 2014ம் ஆண்டு வரை காத்திருக்கட்டும், பரவாயில்லை. அதற்குள் டாடா தலைமையில் நாடு விஸ்வரூப வளர்ச்சியைக் கண்டிருக்கும். அவர்களுக்கு அது வசதியான இந்தியாவாகவும் இருக்கும். எனவே அவர்கள் காத்திருக்கலாம்.

இது நிச்சயம் சாத்தியமானதல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மும்பையில் நடந்து என்ன. யாரும் எதிர்பாராத புதிய வகை தீவிரவாதத் தாக்குதல். எனவே ரத்தன் டாடா பிரதமர் என்பதும் சாத்தியமாகக் கூடியதுதான்.

பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய, தீர்வுகளுடன் இருக்கக் கூடிய ஒரு தலைமையிடம் நமது நாட்டை சில காலம் ஒப்படைப்போம். நமக்காக பாடுபடக் கூடிய ஒருவரிடம் ஒப்படைப்போம்.

இந்தியாவை கடந்த 60 ஆண்டுகளாக அரசியல்வாதிகளிடம் கொடுத்து விட்டோம். அடுத்த 5 ஆண்டுக்கு டாடாவிடம் கொடுக்கலாமே.

முன்பு வெள்ளையர்களின் ஆட்சியிலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என்பதற்காக ஒரு தனி மனிதரின் பின்னால் நமது நாட்டு மக்கள் அணி திரண்டார்கள். ஒற்றுமையுடன், ஒரே குரலில் உரத்து முழக்கமிட்டார்கள். அதேபோன்ற தருணம் இப்போதும் வந்துள்ளது.

சாதனைகளை மட்டுமே சொந்தமாக வைத்திருக்கும் ரத்தன் டாடா நம்மிடம் உள்ளார் என்பதே பலமான விஷயம். எனவே அவரிடம் ஆட்சியைக் கொடுப்போம். புதிய இந்தியாவை சேர்ந்து உருவாக்குவோம்.

நன்றி: Rajesh Jain"s Blog

(அனுமதியுடன் மொழி பெயர்க்கப்பட்டது)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X