For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கதேச கலகம் பரவுகிறது-இந்தியா உஷார் நிலை

By Sridhar L
Google Oneindia Tamil News

Bangladesh BDR soldiers
டாக்கா: வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையான ரைபிள்ஸ் படையினர் நேற்று தொடங்கிய புரட்சி இன்று மேலும் பல பகுதிகளுக்குப் பரவியது. இதுவரை கலகத்திற்கு 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கலகம் பரவி வருவதைத் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வங்கதேச ரைபிள்ஸ் படையினர் (பிடிஆர்) நேற்று காலை டாக்காவில் உள்ள தங்களது தலைமையகத்தில் திடீர் புரட்சியில் குதித்தனர். படையின் மேஜர் ஜெனரல் உள்பட 15க்கும் மேற்பட்ட அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.

ஊதிய உயர்வு விஷயத்தில் பாதுகாப்பு அமைச்சகம் தங்களை இரண்டாந்தரமாக நடந்துவதாகக் கூறி ராணுவத்துக்கு எதிராக இந்தப் புரட்சியைத் துவக்கியுள்ளனர் ரைபிள்ஸ் படையினர்.

அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து அவர்களின் குடும்பத்தினரையும், பெண்கள், குழந்தைகளையும் சிறை பிடித்தனர்.

தலைமையகம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புரட்சி நடந்ததும் அவர்களை அடக்க அந்த இடத்துக்கு ராணுவம் அனுப்பப்பட்டது. அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சிறிது நேரம் சண்டை நடந்தது.

இந் நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா புரட்சிக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முன் வந்தார். இதற்காக அமைச்சர்களை அனுப்பினார். ஆனால், பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

கலகத்தில் ஈடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.

அவர்களை ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடையும்படி கேட்டனர். இதற்கு ஒரு பிரிவினர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று நள்ளிரவு வரை பதட்டம் நீடித்தது. அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் ஆயுதங்களை கீழே போட சம்மதித்தனர். ஒவ்வொருவராக ஆயுதங்களை கீழே போட்டு ராணுவத்திடம் சரண் அடைய ஆரம்பித்தனர்.

ஆனால் இன்று காலை முதல் மீண்டும் கலகம் தொடர்ந்து வருகிறது. மேலும் பல பகுதிகளில் கலகம் பரவியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தலைநகர் டாக்காவுக்கு வெளியேயும் தற்போது கலகம் பரவியுள்ளது.

வங்கதேசத்தில் உள்ள 12 நகரங்களில் அமைந்துள்ள பிடிஆர் முகாம்களை வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் மொத்தம் 42 பிடிஆர் முகாம்கள் உள்ளன. இவற்றில் 40,000 வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்காங்கு உள்ள முகாம்களில் உயர் அதிகாரிகளை வீரர்கள் சிறை பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள கூறுகின்றன. சில இடங்களில் அதிகாரிகளை விரட்டி விட்டு விட்டு அவற்றை வீரர்கள் பிடித்துள்ளனர்.

துறைமுக நகரான சிட்டகாங்க்கில், கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக ஒரு தகவல் கூறுகிறது. அதேபோல இந்திய எல்லையை ஒட்டியுள்ள பெனி என்ற இடத்திலும், வட மேற்கில் உள்ள ராஜ்ஷாஹி என்ற இடத்திலும், வடக்கில் உள்ள ஷைல்ஹட் என்ற இடத்திலும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.

பல்வேறு இடங்களில் நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படை உஷார்:

வங்கதேசத்தில் நடந்து வரும் இந்த கலகம் மற்றும் கலவரத்தைத் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகபட்ச உஷார் நிலையில்வைக்கப்ட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், எல்லைப் பகுதியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும் நமது பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைக்கு எல்லைப் பகுதி பாதுகாப்பாகவே உள்ளது. எந்தவித அச்சமும் தேவையில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X