For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல் - முதல் கட்ட வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

By Sridhar L
Google Oneindia Tamil News

Parliament
டெல்லி: 124 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான அறிவிக்கையை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று வெளியிட்டார். இதையடுத்து வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

லோக்சபாவுக்கு ஐந்து கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதில் முதல் கட்டமாக 124 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு ஏப்ரல் 16ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான முறையான அறிவிப்பை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று வெளியிட்டார். இதையடுத்து தேர்தல் நடைமுறைகள் தொடங்கின. வேட்பு மனு தாக்கலும் இன்றே தொடங்கியது.

மொத்தம் 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 124 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

முதல் கட்ட லோக்சபா தேர்தலுடன், ஆந்திர மாநிலத்தில் உள்ள 154 (மொத்தம் 294) சட்டசபைத் தொகுதிகள், ஒரிசாவில் உள்ள 70 (மொத்தம் 147) சட்டசபைத் தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

இவற்றுக்கான அறிவிக்கையை சம்பந்தப்பட்ட மாநில ஆளுநர்கள் வெளியிட்டனர்.

இன்று தொடங்கும் வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 2ம் தேதிக்குள் மனுக்களை திரும்பப் பெற வேண்டும்.

முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களும், தொகுதிகளின் எண்ணிக்கையும் ..

ஆந்திரா (22), கேரளா (20), உ.பி (16), மகாராஷ்டிரா (13), பீகார் (13), சட்டீஸ்கர் (11), ஒரிசா (10), ஜார்கண்ட் (6), அசாம் (3), அருணாச்சலபிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான் நிக்கோபார் (1), லட்சத்தீவு (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), மணிப்பூர் (1), காஷ்மீர் (1).

2வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதியும், மூன்றாவது கட்ட வாக்குப் பதிவு 30ம் தேதியும், நான்காவது கட்ட வாக்குப் பதிவு மே 7ம் தேதியும், இறுதிக் கட்ட வாக்குப் பதிவு மே 13ம் தேதியும் நடைபெறுகின்றன. வாக்கு எண்ணிக்கை மே 16ம் தேதி நடைபெறும்.

தமிழகத்தில் மே 13ம் தேதி இறுதி கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் 71.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மொத்தம் 543 லோக்சபா தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

எங்கெங்கு எப்போது வாக்குப்பதிவு?

ஜம்மு காஷ்மீர், உ.பி. மாநிலங்களுக்கு ஐந்து கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

பீகாரில் நான்கு கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 3 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஆந்திரா, அசாம், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், ஒரிசா, பஞ்சாப் மாநிலங்களில் 2 கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தமிழகம் உள்ளிட்ட மீதமுள்ள 15 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஏழு யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

2வது கட்ட வாக்குப்பதிவுக்கான (141 தொகுதிகள்) வேட்பு மனு தாக்கல் மார்ச் 28ம் தேதி தொடங்குகிறது.

3வது கட்ட வாக்குப் பதிவுக்கான (107 தொகுதிகள்) வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 2ம் தேதி தொடங்குகிறது.

4வது கட்ட வாக்குப் பதிவுக்கான (86 தொகுதிகள்) வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகிறது.

கடைசிக் கட்ட வாக்குப் பதிவுக்கான (86 தொகுதிகள்) வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17ம் தேதி தொடங்குகிறது.

தேர்தல் பணியில் 2500 தேர்தல் பார்வையாளர்கள் ஈடுபடவுள்ளனர். 40 லட்சம் அதிகாரிகளும், 21 லட்சம் பாதுகாப்புப் படையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

முதல் கட்ட வாக்குப் பதிவுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி ஓய்வு பெறுகிறார். மற்ற நான்கு கட்ட வாக்குப் பதிவுகளும், புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவின் தலைமையின் கீழ் நடைபெறும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X