For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் தோல்விக்கு வருணை பலிகடா ஆக்கக் கூடாது - மேனகா

By Staff
Google Oneindia Tamil News

Maneka Gandhi
டெல்லி: பாஜகவின் தோல்விக்கு வருண் காந்தியை மட்டும் பலி கடா ஆக்கக் கூடாது என்று அவரது தாயாரான மேனகா காந்தி கூறியுள்ளார்.

நேற்று டெல்லியில் தொடங்கிய பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் மேனா காந்தி பேசுகையில், தேர்தலில் தோற்றவர்கள் தங்களது தோல்விக்கு வருண் காந்தியின் பேச்சுதான் காரணம் என கூறுவது முறையற்றது, தவறானது.

உ.பி. மாநில தேர்தல் பொறுப்பாளரை (அருண் ஜெட்லி) போனில் கூட தேர்தல் பிரசாரத்தின்போது பிடிக்க முடியவில்லை. மாநிலத்தில் தேர்தல் உத்திகளை வகுப்பதை விட்டு விட்டு மீடியாக்களுக்கு செய்தி தரும் வேலையை மட்டுமே அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

முன்பு உ.பி. மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்த பிரமோத் மகாஜனுக்கும், தற்போதைய பொறுப்பாளருக்கும் இடையே மலை அளவுக்கு வித்தியாசம் உள்ளது. பிரமோத் மகாஜன், தினசரி தேர்தல் பணிகளை நேரடியாக பார்வையிடுவார். வேட்பாளர்ளின் முன்னேற்றத்தையும் அவர் கண்காணித்து வருவார்.

உ.பி. மாநில பாஜக தலைமை மிகச் சிறப்பாகவே செயல்பட்டது. ஆனால் தேர்தல் பொறுப்பாளர் சரியில்லாவிட்டால், மாநில நிர்வாகத்தால் என்ன செய்ய முடியும்.

பாஜகவிலிருந்து கல்யாண் சிங் விலகியது கட்சிக்கு பேரிழப்பாகும். இதனால்தான் சந்தோஷ் கங்வார் போன்ற மூத்த தலைவர்களும் கூட தோல்வியைத் தழுவ நேரிட்டது என்றார் மேனகா.

அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் - ஷோரி

அருண் ஷோரி பேசுகையில், தேர்தல் தோல்விக்கு கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் மட்டுமே பொறுப்பு ஏற்றால் போதாது. அவர் மட்டும் எதற்காக பொறுப்பேற்று கொள்ள வேண்டும். தோல்விக்கு காரணமான அனைத்து தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு பிற தலைவர்கள் எழுதிய கடிதங்கள் அனைத்தும் எப்படி வெளியாகின? இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

பெயர் சொல்ல விரும்பாத ஆறு பத்திரிகையாளர்கள் தான், பா.ஜனதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் கட்டுரைகள் எழுதி வருகின்றனர்.

கட்சியில் பொறுப்புணர்ச்சியை உறுதி செய்யும் வகையில் செயல்திட்டம் வகுக்க வேண்டும். கட்சியின் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டியை அமைத்து அந்த கமிட்டி அளிக்கும் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும்.

கட்சியின் அனைத்து வழிகாட்டுதல்களும் டெல்லியில் இருந்தே வெளியிடப்பட்டு வருகின்றன. மிக அதிக அளவிலான மையப்படுத்துதல் இருந்து வருகிறது. எனவே, கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் டெல்லியை விட்டு வெளியே இருந்து 10 தலைவர்களை கொண்டு வர வேண்டும்.

தோல்விக்கு காரணமான முக்கிய மூளையாக செயல்பட்டவர்கள் எல்லாம் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்து இருக்கின்றனர் என்றார் ஷோரி.

இனிமேல் போட்டியிட மாட்டேன் - ஜஸ்வந்த் சிங்

மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங் பேசுகையில், தோல்விக்கு காரணமானவர்களுக்கு எல்லாம் கட்சியின் பாராளுமன்ற கமிட்டியில் முக்கிய பதவிகளை வழங்கியது எப்படி?

என்னைப் பொறுத்தவரை நான் போட்டியிட்ட கடைசி தேர்தல் இது தான். இனிமேல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. எனக்கு எந்த பதவி மீதும் ஆசையில்லை என்றார்.

இதெல்லாம் தோல்வியே இல்லை - பட்வா

மூத்த தலைவரான சுந்தர்லால் பட்வா அனைவரையும் சமாதானப்படுத்தும் வகையில் பேசினார்.

அவர் பேசுகையில், பா.ஜ.க தொண்டர்கள் மனதை தளரவிடக் கூடாது. ஆரம்ப காலங்களில், டெபாசிட் தொகையை தக்க வைத்ததையே நாம் கொண்டாடினோம். அதை ஒப்பிடும்போது, இது ஒன்றுமே கிடையாது என்றார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X