For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.25க்கு மாதந்திர ரயில் பாஸ்-எஸ்.எம்.எஸ்சில் வெயிட்டிங் லிஸ்ட்!

By Staff
Google Oneindia Tamil News

Railway Budget-2009
டெல்லி: ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் நாடு முழுவதும் 57 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் 15வது ரயில்வே பட்‌ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். அதி்ல் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

சென்னை-டெல்லி இடையே எங்கும் நிற்காத 'பாயின்ட் டூ பாயின்ட்' சூப்பர் பாஸ்ட் ரயில் உள்பட நாடு முழுவதும் 12 பாயின்ட் டு பாயின்ட் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

முக்கிய நகரங்களுக்கு இடையே அதிக பயணிகள் செல்லும் வகையில் டபுள் டெக்கர் ஏசி ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும்.

வெயிட்டிங் லிஸ்ட் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அறியும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தத்கல் டிக்கெட் முன்பதிவுக்கான நாட்கள் 5லிருந்து 2 ஆகக் குறைக்கப்படுகிறது.

நீண்டதூரம் செல்லும் ரயில்களில் குறைந்தபட்சம் ஒரு டாக்டர் நியமிக்கப்படுவார்.

ரூ.1,000க்கு குறைவான வருமானம் உள்ள அமைப்பு சாரா பணியாளர்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ. 25க்கு பாஸ் வழங்கப்படும். இதில் அவர்கள் 100 கி.மீ. வரை பயணம் செய்யலாம்.

நாடு முழுவதும் 5,000 தபால் நிலையங்களில் ரயில்வே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். 3,000 முன்பதிவற்ற ரயில் டிக்கெட் மையங்கள் திறக்கப்படும்.

நடமாடும் டிக்கெட் வேன்கள் அறிமுகப்படுத்தப்படும், அதே போல முக்கிய ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை மெஷின்கள் நிறுவப்படும்.

மேலும் சென்னை, கொல்கத்தா, டெல்லியில் நெரிசலான நேரங்களில் பெண்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

-தனியாருடன் இணைந்து சென்னை சென்ட்ரல், மும்பை சத்ரபதி, பெங்களூர் உள்ளிட்ட 50 ரயில் நிலையங்கள் உலகத் தரம் வாய்ந்ததாக மேம்படுத்தப்படும்.

-200 சிறிய ரயில் நிலையங்களில் வங்கிகளின் ஏடிஎம்கள் அமைக்கப்படும்

-ஆன்-லைன் ரயில் டிக்கெட் ரத்து முறை எளிதாக்கப்படும்

-அரசு அங்கீகாரம் பெற்ற நிருபர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை

-ரூ. 299 முதல் ரூ.399க்கு இளைஞர்களுக்கு ஏசி ரயி்ல் டிக்கெட்

-ஜார்க்கண்ட்-மே.வங்க எல்லையில் என்டிபிசியுடன் இணைந்து 11,000 மெகாவாட் திறன் கொண்ட ரயில்வே மின் நிலையம் அமைக்கப்படும்.

-விவசாயப் பொருட்களை இருப்பு வைக்க ஏசி கிட்டங்கிகள்

-மேற்கு வங்க மாநிலம் கச்ராபாராவில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.

-ரயில்வே சார்பில் மருத்துவக் கல்லூரிகள், புதிய மருத்துவமனைகள் திறக்கப்படும்

-இடைக்கால ரயில்வே பட்ஜெட் இலக்குகள் எட்டடப்பட இயலாதவையாக உள்ளதால் அவை திருத்தி அமைக்கப்பட்டு்ள்ளன.

-ராஜதானி-சதாப்தி ரயில்களில் கேளிக்கை, இன்டர்நெட் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

-உபயோகமில்லாத ரயில்வே நிலங்கள் தொழில்துறைக்கு ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தப்படும்

-ரயில்வே வேலை வாய்ப்பு வாரியத்தின் செயல்பாடு மாற்றியமைக்கப்படும்.

-எஸ்சி, எஸ்டி காலியிடங்கள் நிரப்பப்படும்

-பயணிகள் பாதுகாப்பு, சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

-ரயி்ல்களில் சுற்றுச்சூழல் சார்ந்த டாய்லெட்கள் அமைக்கப்படும்

-ஜனதா உணவு தி்ட்டம் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் விரிவாக்கப்படும்

-ரயில்கள், ரயில் நிலையங்களில் முதியோருக்கு கூடுதல் வசதிகள் செய்யப்படும்.

-ஊனமுற்றோருக்கு சிறப்பு டிராலிகள், படிகள் அமைக்கப்படும்.

-பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில்களில் பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும்.

-ரயில்வே வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம்.

-ரயில்வே ஊழியர்களின் பெண் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித் திட்டம்.

-130 ரயில் நிலையங்கள் நக்சல்கள் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று கண்டறியப்பட்டுள்ளதால் அவற்றுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பு வழங்கப்படும். இந்த ரயில் நிலையங்கள் வழியாக செல்லும் ரயில்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்படு்ம்.

-49 மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அடையாளம காணப்பட்டு அங்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அங்கு நிலையங்கள் உருவாக்கப்படும்.

-ரயில்கள் நேரம் தவறாமல் வர நடவடிக்கை.

-சுகாதாரமான உணவு, நீருக்கு முக்கியத்துவம் என்று கூறப்பட்டுள்ளது.

-27 ரயில்கள் நீடிக்கப்பட்டுள்ளன. 13 ரயில்களின் பயண எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

முக்கிய ரயில் நிலையங்களில் ஷாப்பிங் செய்வதற்கான கடைகள், ஹோட்டல்கள், பார்மசி மற்றும் பல்வகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைக் கொண்ட பல்நோக்கு வணிக வளாகங்கள் கட்டப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

மமதா தாக்கல் செய்துள்ள 3வது ரயில்வே பட்ஜெட் இது. இதற்கு முன்பு பாஜக கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றபோது இருமுறை அவர் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.

மம்தா பட்ஜெட் தாக்கல் செய்தபோது முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சில முறை இடைமறித்து கேள்வி கேட்டதால் மம்தா கோபமானார். லாலுவை சபாநாயகர் மீரா குமார் அமைதிப்படுத்திய பின்னரே மம்தா தொடர்ந்து பட்ஜெட்டைப் படித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X