வங்கி மோசடி-பெண் டாக்டர் உள்பட 3 பேரிடம் சிபிஐ விசாரணை
கடையநல்லூர்: கடையநல்லூர் வங்கியில் ரூ.4 கோடி மோசடி செய்த வழக்கில் பெண் டாக்டர், வங்கி மேலாளர் உள்பட 3 பேரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தென்காசியை சேர்ந்தவர் பிரபல டாக்டர் வெங்கடேஷ்வரன். இவர் சென்னையை சேர்ந்த தனது நண்பர் மாயா ராம் என்ற பெண் டாக்டருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட், காற்றாலை உள்ளிட்ட தொழில்கள் செய்து வந்தார்.
இதனிடையே தொழில் அபிவிருத்திகாக டாக்டர் வெங்கடேஷ்வரன், மாயா ராம் இருவரும் சேர்ந்து கடையநல்லூர் வங்கி மேலாளர் அய்யாமணி துணையுடன் போலி ஆவணங்கள் மூலம் 2 கோடியோ 65 லட்சம் கடன் வாங்கினர். இதற்காக அய்யாமணிக்கு 35 லட்சம் லஞ்சமாக இவர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.
வெங்கடேஷ்வரன் பணத்தை திருப்பி செலுத்தாததால் அத்தொகை வட்டியுடன் சேர்ந்து 4 கோடியாக உயர்ந்தது.
இதனிடையே மாயாராம் தன்னை ஏமாற்றி பணத்தை எடுத்து கொண்டதாக சென்னை சிபிஐயில் புகார் கொடுத்தார் வெங்கடேஷ்வரன்.
இதையடுத்து மாயாராம் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த சிபிஐ வெங்கடேஷ்வரன் மற்றும் அய்யாமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த மோசடியில் வங்கி உயரதிகாரிகள் உள்பட பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சிபிஐ சந்தேகிப்பதால் வெங்கடேஷ்வரன், அய்யாமணி, மாயா ராம் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க மதுரை நீதிமன்றத்தில் சிபிஐ மனுதாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் மூன்று பேரையும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதியளித்தார்.
இதையடுத்து சிபிஐ போலீசார் 3 பேரிடமும் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகும் என்பதால் வங்கி உயரதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications