For Daily Alerts
Just In
பாட்மின்டன்-தங்கம் வென்று ஜூவாலா, டிஜூ ஜோடி சாதனை
டெல்லி: சீன தைபே பாட்மின்டன் கிராண்ட்பிரி தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா குட்டா, டிஜூ ஜோடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
சீன தைபேயில் கிராண்ட் பிரி பாட்மின்டன் தொடர் நடந்தது. நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஜூவாலா, டிஜூ ஜோடி, இந்தோனேசியாவின் ஹென்ட்ரா குனவான், விடா மாரிஸ்ஸா ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடி 23-21, 21-18 என்ற செட்களி்ல் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
இதன்மூலம் கிராண்ட்பிரி தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடி என்ற சாதனை படைத்தது.
இது குறித்து இந்திய பாட்மின்டன் சங்க தலைவர் விகே வர்மா கூறுகையில், இது இந்திய பாட்மின்டனுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றார்.