கார்..பைக்: அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்!
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் கார், இருச க்கர வாகனம் வாங்க வழங்கப்படும் முன் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள உத்தரவில்,
அரசு ஊழியர்கள், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான முன் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வரப்பெற்றன.
இதையடுத்து, ரூ.37,400 மற்றும் அதற்கும் அதிகமாக ஊதியம் பெறுவோருக்கு கார் வாங்க அதிகபட்சமாக ரூ.6 லட்சமும்,
ரூ.15,600 ஊதியம் பெறுவோருக்கு ரூ.5 லட்சமும், ரூ.2,800 வரை தர ஊதியம் பெறுவோருக்கு ரூ.3 லட்சமும் முன் தொகை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
அதேபோல் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு எல்லா அரசு ஊழியர்களுக்கும் அதிகபட்சம் ரூ.50 ,000 வரை முன் தொகை வழங்கப்படும்.
பழைய வாகனங்கள் வாங்குவதற்கு இந்த உத்தரவு பொருந்தாது. ஒருவேளை, வாங்கப்படும் கார் அல்லது இரு சக்கர வாகனத்தின் விலை, குறிப்பிட்டுள்ள முன்தொகை உச்சவரம்புக்கு குறைவாக இருந்தால், வாகனத்தின் விலை, பதிவு செய்வதற்கான தொகை மற்றும் காப்பீடு செய்து கொள்வதற்கான தொகை ஆகியவற்றுக்கு மட்டும் முன் தொகை வழங்கப்படும்.
ஒவ்வோர் ஆண்டும் இத்தொகை 5 சதவீதம் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நேற்று தான் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3வது முறையாக 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இப்போது அடுத்த 'ஜாக்பாட்டாக' கார், பைக் வாங்குவதற்கான முன் பணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.