For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலி நகைகளை விற்று மோசடி - நடிகர் உள்பட 3 பேர் கைது

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் நகை புரோக்கர்களிடம் போலி நகைகளை விற்று மோசடியில் ஈடுபட்டதாக சரத்குமார் நடித்துள்ள பழசி ராஜா படத்தில் நடித்துள்ள ஸ்டண்ட் நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாளை அருகேயுள்ள கீழநந்தம் வடகூர் அருணாகிரி நாதர் தெருவை சேர்ந்தவர் நடராஜன். நெல்லை டவுன் தர்மராஜ கோவில் தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். இருவரும் நண்பர்கள். நெல்லையில் நகை புரோக்கர் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 8ம் தேதி இருவரும் பாளை சாந்திநகரில் நின்றபோது 3 வாலிபர்கள் அங்கு வந்தனர்.

ஒருவர் இரு பெரிய தங்க வளையல்களை விற்பதற்கு கொடுத்தார். ஒவ்வொரு வளையலும் தலா 11 கிராம் எடையுள்ளது. ஒரு கிராம் 1200 ரூபாய் என விலை பேசினார். இரண்டு வளையல்களை வி்ற்பதற்கு அவர்கள் 2000 ரூபாய் அட்வான்ஸ் வாங்கி சென்றனர்.

இரண்டு வளையல்களையும் நடராஜனும், அமல்ராஜூம் சோதித்த போது அவை தங்க மூலம் பூசப்பட்டு மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட கவரிங் நகைகள் என தெரியவந்தது. இதுகுறித்து நடராஜன் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் இறஞ்சகுளம் அருள்ஞானபுரத்தை சேர்ந்த டேனியல், அதே ஊர் பரதர் தெருவை சேர்ந்த மாரியப்பன், சாந்திநகர் 24வது தெருவை சேர்ந்த கண்ணனிடம் விசாரணை நடந்தது. மாரியப்பன் தற்போது சாந்திநகர் 24வது தெருவில் வசித்து வருகிறார்.

டேனியல் போலி நகைகளை விற்று மோசடியில் ஈடுபட்டதும், இதற்கு மாரியப்பன், கண்ணன் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து 6 போலி தங்க வளையல்கள், 2000 ஆயிரம் ரூபாய், மோட்டார் பைக் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் டேனியல் தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகின.

மம்மூட்டி, சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் பழசி ராஜா, காஞ்சிபுரத்தே கல்யாணம் மலையாள படங்களிலும், சிங்கம், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், தமிழ் படங்களிலும் டேனியல் ஸ்டண்ட் நடிகராக சிப்பாய் போன்ற வேடங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் வருமானம் இல்லாததால் திருட்டு...

திரையுலகில் போதிய வருமானம் கிடைக்காததாலும், சினிமாவில் மார்கெட் இல்லாததாலும் டேனியல் போலி நகை வியாபாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

நாகர்கோவில் பைனான்ஸ் நிறுவனத்திலும், வடசேரி பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள நகை அடகு கடைகளிலும் போலி வளையல்களை அடகு வைத்து 1 லட்சம் ரூபாய் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X