கருவறையில் பூசாரியின் அசிங்கம்-சிடிக்கள் விற்பனை

Subscribe to Oneindia Tamil
Devanathan Archagar
சென்னை: காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் வைத்து 6 பெண்களுடன் கோவில் பூசாரி தேவநாதன் அசிங்கமாக நடந்து கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்குகள் சிடி வடிவில் விற்பனையில் உள்ளன. ஒரு சிடி ரூ. 100க்கு விற்கப்படுகிறதாம்.

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்தவர் தேவநாதன் (35). வாலாஜாபாத்தை அடுத்துள்ள பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்த இவர், தான் பூஜை செய்து வந்த கோவிலுக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தினார்.

6 பெண்களுடன் கோவில் கருவறையில் இவர் காமலீலைகளை அரங்கேற்றியது தெரியவந்தபோது பெரும் அதிர்ச்சி பரவியது.

இந்தக் காட்சிகளை தனது செல்போன் மூலம் படமும் பிடித்துள்ளார். செல்போன் பழுதானபோது அதை வெளியில் ரிப்பேர் செய்யக் கொடுத்தபோது அந்தக் கடைக்காரர் இந்தக் காட்சிகளைப் பார்த்து விட்டு பதிவு செய்து வெளியே விட்டு விட்டார். இதன் மூலமே தேவநாதனின் அசிங்கம் அம்பலத்திற்கு வந்தது.

தற்போது தேவநாதனின் அசிங்கம் அடங்கிய காட்சிகள் சிடிக்களாக போட்டு படு சூடாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த சிடிக்கள் படு வேகமாக விற்பனையாகிறதாம். ஒரு சிடிக்கு ரூ. 100 விலை வைத்து விற்று வருகின்றனர்.

இதையடுத்து இந்தக் கும்பலைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.

இதற்கிடையே தேவநாதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல அவருடன் உல்லாசமாக இருந்த, அவரது அக்கிரமத்திற்குத் துணை போன பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தவும் போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தேவநாதனையும், அவருடன் இருந்த பெண்களையும் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

சிவகாஞ்சி போலீசார் தேவநாதன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தேவநாதன் தப்பி ஓடி தலைமறைவானார். அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சென்னை நங்கநல்லூரில் தேவநாதனின் உறவினர்கள் நிறைய பேர் உள்ளனராம். எனவே இவர்களில் யாரோ சிலர்தான் தேவநாதனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து நங்கநல்லூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் தனிப்படையினர் பொறி வைத்து தேடி வருகின்றனர்.

தேவநாதனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்துள்ளதால் அவர் தப்பிச் செல்ல முடியாது. நிச்சயம் விரைவில் சிக்குவார் என்று போலீஸார் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...