For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமச்சீர் கல்வியை அமலாக்க அவசரச் சட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த அவசரச் சட்டத்தை தமிழக ஆளுநர் பிறப்பித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், சமச்சீர் கல்வி,​ வரும் 2010ம் கல்​வி​யாண்​டில் 1 மற்​றும் 6ம் வகுப்​பு​க​ளில் அமல்​ப​டுத்​தப்​ப​டும்.

2011ம் ஆண்டிலிருந்து 2ம் வகுப்பு மற்​றும் 7ம் வகுப்​பி​லும்,​ அடுத்​த​டுத்த கல்​வி​யாண்​டில் 10ம் வகுப்பு வரை சமச்​சீர் கல்வி அமல்​ப​டுத்​தப்​ப​டும் என்று அறிவித்திருந்தது.

மேலும், மாநி​லக் கல்வி திட்​டம்,​ ஆங்​கிலோ இந்​தி​யன்,​ மெட்​ரி​கு​லே​ஷன்,​ ஓரி​யண்​டல் ஆகிய நான்கு கல்வி வாரி​யங்​களை ஒருங்​கி​ணைத்து மாநில பொதுப் பள்ளி கல்வி வாரி​யம்
தொடங்​கப்​ப​டும் என்​றும்,​ அதே​போல ஒரே மாதிரியான பொதுப் பாடத்​திட்​ட முறை​யும் கொண்டு வரப்படும் எனவும் அரசு அறிவித்தது.

இதையடுத்து தேசிய கலைத்​திட்ட வடி​வ​மைப்பு அடி்படையில், சமச்​சீர் கல்​விக்​கான வரை​வுப் பொதுப் பாடத்​திட்​டம் தயா​ரித்து முடிக்​கப்​பட்டு விட்​டது. இப்​போது பாட​நூல்​கள் எழு​தும் பணி நடந்து வரு​கி​றது.

இந்​நி​லை​யில்,​ சமச்​சீர் கல்​வியை நடை​மு​றைப்​ப​டுத்​து​வது தொடர்​பான அவ​சர சட்​டம் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. இக்​கல்வி முறையை நடை​மு​றைப்​ப​டுத்​திட மாநி​லப் பொதுப் பள்ளி கல்வி வாரி​யம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த வாரி​யத்​துக்கு பள்​ளிக் கல்​வித் துறை இயக்​கு​நர் பெருமாள்​சாமி தலை​வ​ராக இருப்​பார். பள்​ளிக் கல்​வித்​துறை கூடு​தல் செய​லா​ளர்,​ தேர்​வுத்​துறை இயக்​கு​நர்,​ மெட்​ரிக் பள்ளிகள் இயக்​கு​நர்,​ தொடக்​கக் கல்வி இயக்​கு​நர்,​ ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்​கக இயக்​கு​நர்,​ இணை இயக்​கு​நர் ​(இடை​நி​லைக் கல்வி)​ ஆகி​யோர் உறுப்பினர்களாக இருப்​பார்​கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X