இந்தியா ஏன் இரட்டை வேடம் போடுகிறது?: சிபிஐ
சென்னை: இலங்கை அரசுக்கு உதவுவதில் காட்டிய அக்கறையை தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதில் இந்திய அரசு ஏன் காட்டவில்லை என்று மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
ஆஸ்திரேலியாவில் ஒரு இந்தியர் பாதிக்கப்பட்டால் காட்டும் அக்கறையை இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில இந்திய அரசு ஏன் காட்டுவதில்லை? என்றும் அவர் கேட்டார்.
மக்களவையில் ஈழத் தமிழர் பிரச்சனை மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அவர் பேசுகையி்ல்,
இலங்கை அரசு அளித்த வாக்குறுதிபடி 6 மாதத்துக்குள் ஈழத் தமிழர்கள் சொந்த ஊரில் குடியமர்த்தப்படவில்லை. அதற்காக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?.
குடியமர்த்தும் பணியை 2010ம் ஆண்டு வரை கால நீட்டிப்பு செய்திருக்கிறார்கள். அதை இந்திய அரசு அனுமதிக்கிறது.
இலங்கை அரசுக்கு உதவுவதில் காட்டிய அக்கறையை தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதில் இந்திய அரசு ஏன் காட்டவில்லை?.
10 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவில் ஒருவனாக நானும் இலங்கை சென்றிருந்தேன். அங்கே 11,000 பேர் போராளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு ரகசிய இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிந்தோம். நாங்கள் எவ்வளவோ முயற்சி எடுத்தும் அவர்களை
சந்திக்க இலங்கை அரசு அனுமதிக்கவில்லை.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார், தந்தையார் மற்றும் மாமியார் ஆகியோரை இலங்கை அரசு முகாம்களில் அடைத்து வைத்து
கொடுமைப்படுத்துகிறார்கள். வயது முதிர்ந்த அவர்களை மீட்க இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் செங்கல்பட்டு முகாமில் சுமார் 50 பேர் எவ்வித விசாரணையும் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல.
இலங்கையில் அகதி முகாமிகளில் 10,000 பேர் தங்கக் கூடிய முகாம்களில் சுமார் 30,000 பேரை ஆடு, மாடுகளைப்போல அடைத்து வைத்துள்ளனர்.
சீன அரசுடன் இலங்கை அரசு கொண்டுள்ள நெருக்கம் இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும். இந்திய அரசின்
வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை.
ஆஸ்திரேலியாவில் ஒரு இந்தியர் பாதிக்கப்பட்டால் காட்டும் அக்கறையை இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில இந்திய அரசு ஏன் காட்டுவதில்லை?.
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வகையில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட இந்தியா முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் திருமாவளவன்.
டி.ராஜா...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா பேசுகையில், இலங்கையில் இன்றைக்கு தமிழர்கள் அமைந்துவரும் துன்பம், உலகில் வேறு யாராவது அடைந்திருப்பார்களா என்று கூறமுடியாது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்டாக கூறப்படும் போர் தமிழர்கள் மீது தொடரப்பட்ட போராகும், இந்திய அரசின் முழு உதவியுடன் நடத்த போராக அது இருந்தது, இலங்கை கேட்டபோதெல்லாம் ஆயுதம் வழங்கியுள்ளது.
இவை அனைத்து தமிழர்களையும் கொல்லப் பயன்பட்டுள்ளது. 2 ராணுவக் கப்பல்களையும் அனுப்பி இந்தியா உதவி செய்துள்ளது அந்த நாட்டினாரலேயே அம்பலமாகியுள்ளது.
இலங்கை தமிழர் நிலையில் இந்தியாவின் இந்த இரட்டை வேடத்திற்கு காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமாக இந்திய அரசு இருந்துள்ளது என்று குற்றம் சாட்டுகிறேன்.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கையை ஐ.நா.மன்றத்தில் கடுமையாக எதிர்த்த மனித உரிமை பிரதிநிதி நவி பிள்ளை மீது இந்தியா கடுமையாக நடந்து கொண்டது ஏன்? மனித உரிமை பாதுகாப்பில் ஏன் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது.
சுமார் 1 லட்சம் பேர் சொந்த இடங்களுக்கு சென்றுவிட்டதாக கூறும் இந்தியாவிடம் அவர்க்ள உண்மையிலேயே அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தப்பட்டார்களா? என்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள் ஏதும் இல்லை.
தமிழர்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனரா என்பதை கண்காணிக்கவும், நிவாரண உதவிகள் கிடைக்கின்றனவா என்று தெரிந்துகொள்ளவும், இந்தியாவிலிருந்து அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழு நேரடியாக சென்று ஆய்வு செய்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
ஓ.எஸ்.மணியன் (அதிமுக):
அதிமுக உறுப்பினர் மணியன் பேசுகையில், இலங்கையில் போர் முடிவடைந்துள்ள நிலையில், முன்னாள் ராணுவ தளபதி, சீனா மற்றும் பாகிஸ்தான் உதவியுடன் போரில் வெற்றி பெறவில்லை என்றும், இந்தியாவினால்தான் வெற்றி பெற முடிந்ததாக கூறி இருப்பது கவனிக்கத்தக்கது.
இதுவரை 10 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இலங்கைக்கு ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் குழுவை அனுமதித்த மத்திய அரசு அனைத்துக்கட்சி குழுவை அனுப்பாதது ஏன்?
குழுவில் சென்ற திருமாவளவன் வேதனை தெரிவித்து இருக்கிறார். மற்றவர்கள் மவுனம் சாதிப்பது ஏன்? இந்திய பிரதமர், உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆகியோரில் ஒருவர் கூட இலங்கை தமிழர்களின் அவல நிலை பற்றி வாய் திறக்காதது ஏன்? என்றார்.
-
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications