For Quick Alerts
For Daily Alerts
சென்னையிலும் விரைவில் மினி பஸ்கள்!

இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறுகையில்,
.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் முதல் கட்டமாக 100 மினி பஸ்கள் இயக்கப்படும்.
இந்த பஸ்களை உருவாக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. விரைவில் இந்த பஸ்கள் இயக்கப்படும். இதன் மூலம் காலனிகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் பேருந்து நிலையம் வரை நடந்து செல்ல வேண்டியதில்லை.
இதன் மூலம் நகரப் பேருந்துகளில் நெரிசல் வெகுவாக குறையும். சென்னையில் மினி பஸ்களுக்கு கிடைக்கும் ஆதரவு பொறுத்து பல்வேறு பகுதிகளுக்கும் அவை விரிவுப்படுத்தப்படும்.
சென்னை நகரில் தற்போது 1,800 பேருந்துகளில் சாதாரண கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிதாக வாங்கப்படும் 3,000 பேருந்துகளும் சாதாரண கட்டணத்துடன் இயக்கப்படும் என்றார்.