24வது நாளாக தொடரும் என்.எல்.சி. வேலை நிறுத்தம்
நெய்வேலி: சமவேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 24-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமவேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம், டெல்லி ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக் கோரி எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 19-ம் தேதி தொடங்கிய இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை என்.எல்.சி. நிர்வாகம் முறையாக கையாளவில்லை. பேச்சுவார்த்தை என்ற பெயரில் தொழிற்சங்கத்தினர் அழைக்கழிக்கப்படுவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் என்.எல்.சி. நிர்வாகத்துடன் 10 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இது வரை எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 24 -வது நாளாக நீடிக்கிறது.