For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக ஆட்சி ஸ்பெக்ட்ரம் முறைகேடு: ரூ. 50,000 கோடி நஷ்டம்!-நீதிபதி பாட்டீல் குழு விசாரிக்கும்

By Chakra
Google Oneindia Tamil News

Shivraj V Patil
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் குறித்து, பாஜக ஆட்சி நடந்த 2001ம் ஆண்டிலிருந்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறையைத் தான் நானும் பின்பற்றினேன் என்று முன்னாள் அமைச்சர் ராசா கூறி வருகிறார்.

இந் நிலையில் பாஜக ஆட்சியிலிருந்தே ஸ்பெக்ட்ரம் எப்படி விற்கப்பட்டது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது.

மேலும் பாஜக ஆட்சியில் தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பெறும் குளறுபடியான கொள்கை பின்பற்றப்பட்டு வந்தது என்றும், இதனால் 2001ம் ஆண்டிலிருந்தே இதை விசாரிக்க வேண்டும் என்று தொழிலதிபர் ரத்தன் டாடாவும் கோரியிருந்தார்.

அவர் கூறுகையில், பாஜக ஆட்சிக் காலத்தில் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடும் முறை மாற்றப்பட்டு, லாபத்தை பகிர்ந்து கொள்ளும் முறை கொண்டு வரப்பட்டது. இப்போது ராசா விஷயத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரியான சிஏஜி கணக்கிட்ட முறையில் பார்த்தால் பாஜக ஆட்சியிலும் நாட்டுக்கு 50,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவரும் என்று டாடா கூறியுள்ளார்.

இந் நிலையில் பாஜக ஆட்சி நடந்த 2001ம் ஆண்டிலிருந்தே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எப்படி நடந்தது என்பது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். அவர் கூறுகையி்ல், 2001ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகள், லைசென்ஸ் வழங்க பின்பற்றப்பட்ட நடைமுறைகள் ஆகியவை குறித்து நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் குழு விசாரிக்கும்.

இந்தக் குழு 4 வாரத்துக்குள் தனது விசாரணையை முடிக்கும்.

மேலும் முன்னாள் அமைச்சர் ராசா பதவி காலத்தில் வழங்கப்பட்ட 122 தொலைத் தொடர்பு லைசென்ஸ்கள் மட்டுமன்றி அதற்கு முன்னர் வழங்கப்பட்ட லைசென்ஸ்கள் குறித்தும் விசாரிக்கப்படும்.

இதன்மூலம் எந்தெந்த காலகட்டத்தில் ஸ்பெக்ட்ரம் எவ்வாறு வழங்கப்பட்டது என்ற முழு விவரமும் நாட்டு மக்களுக்குத் தெரிய வரும்.

தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த எந்தவொரு அதிகாரியையும் விசாரணைக்கு அழைக்க இந்தக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர்களை இந்த குழு விசாரிக்காது.

விதிமுறைகளை மீறி 85 உரிமங்களைப் பெற்ற 6 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த நோட்டீசுக்கு அவர்கள் 60 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.

English summary
Retired Supreme Court Justice Shivraj Patil, has been appointed to look into the procedures of the DoT for allocating spectrum between 2001 and 2009. The one-man body is expected to give its report within a month. He was a acting Chief Justice of High Court of Madras from 28.12.98 till 19.01.1999. Assumed office as Chief Justice of High Court of Rajasthan on 22.1.1999. Elevated as Judge of the Supreme Court of India and assumed office on 15.3.2000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X