போர்க்குற்ற விசாரணை: ஐநா குழுவை அனுமதிப்பது குறித்து இலங்கை பரிசீலனை!
Subscribe to Oneindia Tamil

முன்னதாக இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக ஆய்வு நடத்த குழுவை அனுப்புவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறியதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
தங்கள் நாட்டு உள்விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்று காட்டமாகக் கூறியிருந்தது. இந்நிலையில் இலங்கையின் நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா வலியுறுத்தல்
இந்த நிலையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச தரத்திலான விசாரணை அவசியம் என்றும், ஒருவேளை ஐநா விசாரணைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அவற்றை அமெரிக்கா கண்காணிக்க வேண்டும் என்றும் அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications