For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் கடும் பனி மூட்டம்-75 உள்ளூர், சர்வதேச விமானங்கள் ரத்து

Google Oneindia Tamil News

Fog in Delhi
டெல்லி: டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவியதால் 75 உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

டெல்லியில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து டெல்லி வரும் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டன அல்லது மாற்றப்பட்டன.

மும்பையிலிருந்து இயக்கப்படும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 2 விமானங்கள் வேறு ஊர்களுக்குத் திருப்பி விடப்பட்டன. தற்போது நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால் விமானப் போக்குவரத்தும் இயல்பாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல ஆறு சர்வதேச விமானங்கள், பிற ஊர்களிலிருந்து வர வேண்டிய 2 விமானங்களும் அருகாமையில் உள்ள நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை மொத்தம் 75 உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், திருப்பி விடப்பட்டதாகவும்
அதிகாரிகள் தெரிவித்தனர்.

7 சர்வதேச விமானங்கள் டெல்லிக்கு தாமதமாக வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிமூட்டம் காரணமாக சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கூட பெருமளவில் பாதிக்கப்பட்டது. சாலைகளில் சென்றோர் எதிரில் வருவோர் தெரியாத அளவுக்கு கடுமையாக இருந்தது பனி மூட்டம்.

English summary
Dense fog enveloped the Indira Gandhi International Airport in Delhi this morning with visibility dropping to near zero affecting flight operations which led to delays, diversions and cancellations of around 75 domestic and international flights. Passengers were a harassed lot as many airlines delayed the departure of their flights due to dense fog. About 15 domestic flights from Delhi were cancelled and 12 international, mostly scheduled to depart late last night and in the wee hours, have been rescheduled, airport authorities said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X