For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தப்பு நடந்து விட்டது, ஆளும் விலகியாச்சு, விசாரணை முடியும் வரை பொறுமை காக்க வேண்டும்: ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

நெல்லை: ஒரு தவறு நடந்து விட்டது. அதற்குப் பொறுப்பேற்று அத்துறையின் அமைச்சரும் விலகி விட்டார். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அது முடியும் வரை பொறுமை காப்பதே சரியானது என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

நெல்லையில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் ப.சிதம்பரம். அப்போது அவர் பேசுகையில்,

ஒரு தவறு நடந்துவிட்டது. அந்த தவற்றுக்காக சம்பந்தப்பட்ட அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அது முடிய வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட அமைச்சர் குற்றவாளியா, நிரபராதியா என்பது தெரிய வரும். விசாரணையின் முடிவு வரும் வரை அதுபற்றி கருத்து சொல்வதில் அர்த்தமில்லை. விசாரணையின் முடிவு வரட்டும். அதுவரை பொறுமையுடன் காத்திருப்பதில் தவறில்லை என்றார் அவர்.

English summary
Union Home minister P.Chidambaram attended a public meeting in Nellai. While speaking in the meeting he told, One mistake was happened, concerned minister also resigned. Now a probe is going on. Let us wait till the inquiry ends. Till then opposition parties should maintain silence. Instead stalling Parliament sessions is unfair, said Chidambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X