For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹசன் அலியின் ஜாமீன் ரத்து... 4 நாட்கள் போலீஸ் காவல்!

By Shankar
Google Oneindia Tamil News

Hasan Ali
டெல்லி: கறுப்புப் பண பதுக்கல் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹஸன் அலியின் ஜாமீனை ரத்து செய்தது உச்சநீதி மன்றம். அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி அளித்தது.

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கிய வழக்கில், புனேவை சேர்ந்த பண்ணை அதிபர் ஹசன் அலி, கடந்த 7-ந் தேதி, அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.

அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவு அனுமதி கோரியபோது, அதை ஏற்க மறுத்த மும்பை செசன்சு நீதிமன்ற நீதிபதி தகலியானி, ஹசன் அலியை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அமலாக்கப்பிரிவு, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அதை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஹசன் அலிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது. அவரை 4 நாள் அமலாக்கப் பிரிவு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

English summary
The Supreme Court on Thursday cancelled the bail granted to Pune businessman Hasan Ali Khan in a money-laundering case and granted the Enforcement Directorate (ED) four-day custody.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X