For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுவை அதிமுக கூட்டணியில் தேமுதிக, சிபிஐக்கு ஒரு சீட்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக மற்றும் சிபிஐ ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா ஒரு சீட் வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நீண்டஇழுபறிக்குப் பின்னர் அகில இந்திய என்ஆர் காங்கிரஸுக்கம், அதிமுகவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

அதன்படி 30 தொகுதிகளில் 17 இடங்களில் என்ஆர் காங்கிரஸும், 13 இடங்களில் அதிமுகவும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 13 தொகுதிலிருந்து தேமுதிகவுக்கு ஒரு சீட்டும், சிபிஐக்கு ஒரு சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு காரைக்கால் தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிபிஐக்கு காமராஜ் நகர் தொகுதி தரப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஒப்பந்தங்களில் அதிமுக, தேமுதிக, சிபிஐ தலைவர்கள் பேக்ஸ் மூலம் கையெழுத்திட்டுக் கொண்டனர்.

இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள தொகுதிகளில் உடன்பாட்டுக்கு ஏற்ப அதிமுக, என்ஆர் காங்கிரஸ், தேமுதிக, சிபிஐ உறுப்பினர்கள் வாபஸ் பெறுவார்கள்.

என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:

மண்ணாடிப்பட்டு
திருபுவனை (தனி)
ஊசுடு (தனி)
மங்கலம்
வில்லியனூர்
உழவர்கரை
கதிர்காமம்
இந்திரா நகர்
தட்டாஞ்சாவடி
லாஸ்பேட்டை
காலாப்பட்டு
உருளையன்பேட்டை
அரியாங்குப்பம்,
ஏம்பலம் (தனி)
பாகூர்
திருநள்ளாறு
நெடுங்காடு (தனி).

அதிமுக தொகுதிகள்:

உப்பளம்
நெல்லித்தோப்பு
காரைக்கால் வடக்கு
முதலியார்பேட்டை
நிரவி-திருப்பட்டினம்
முத்தியால்பேட்டை
மணவெளி
நெட்டப்பாக்கம் (தனி)
ராஜ்பவன்
ஏனம்
மாஹே

English summary
DMDK and CPI have been allotted one seat each in Puducherry. Both the parties are facing the polls in ADMK alliance. NR Congress contests in 17 seats, while ADMK will contest in 11 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X