For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

280 விமானங்கள் ரத்து; 27 கோடி நஷ்டம்!

By Shankar
Google Oneindia Tamil News

Air India Strike
டெல்லி: ஏற்கெனவே பெரும் நஷ்டம் மற்றும் கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், இப்போதைய விமானிகளின் ஸ்ட்ரைக்கால் ரூ 27 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதுவரை 280-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விமானிகளின் வேலை நிறுத்தம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. வேலை நிறுத்தம் செய்து வரும் சங்கத்துடன் எக்சிகியூட்டிவ் பைலட்டுகள் 300 பேரும் நேற்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

எங்களுக்கு உடல் நலம் இல்லை என்று விடுப்பில் சென்ற அவர்கள், 'எங்கள் இளம் விமானிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறோம்' என்று அறிவித்தனர்.

இதன் காரணமாக 280-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 5 நாட்களுக்கு விமானங்களுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

ரூ.27 கோடி இழப்பு

இதனால் பல்லாயிரக்கணக்கான விமானப் பயணிகள், உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு போக முடியாமலும், ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை கொண்டு சேர்க்க முடியாமலும் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

விமானிகளின் 3 நாள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 27 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சில தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றன.

சில விமானங்களில் கட்டணம் 3 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டது. முக்கிய வழித்தடங்களில் முன்கூட்டியே அனைத்து டிக்கெட்டுகளையும் ப்ளாக் செய்துவிட்ட சிலர், அதை எக்கச் சக்க விலையில் விற்று வந்தனர்.

English summary
Air India has incurred an approximate loss of Rs27 crore in the past three days due to the pilots’ strike which forced it to cancel at least 280 flights.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X