For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்த் புகாருக்கு பதிலளிக்க அனுமதி மறுப்பு-திமுக வெளிநடப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறிய ஒரு குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று வெளிநடப்புச் செய்தனர்.

சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் விவாதத்தைத் தொடங்கிப் பேசினார்.

அப்போது காவிரி நீர்ப் பிரச்சினை, பாலாறு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய அவர் தமிழகத்திற்கும், அண்டை மாநிலங்களுக்கும் இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதையடுத்து இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க திமுக தரப்பில் கோரப்பட்டது. ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதையடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர்.

English summary
DMK MLAs staged a walk out from the assembly after speaker Jayakumar denied permission to express their views. Opposition leader Vijayakanth while speaking in the assembly made a scathing attack on earlier DMK govt. On seeing this DMK members wanted to reply. But speaker denied permission, so they walked out.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X