For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிக் பாஸ் வீட்டில் சுவாமி அக்னிவேஷ் – கலகலப்பாக தொடங்கியது நிகழ்ச்சி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Swamy Agnivesh at Big bioss house
சமூக ஆர்வலரும், முன்னாள் அன்னா ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினருமான சுவாமி அக்னிவேஷ் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ நடைபெறும் வீட்டிற்குள் 'கெஸ்ட்' ஆக புகுந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே அந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் தடபுடலாக வரவேற்பளித்தனர்.

போட்டியாளர்களில் பலருக்கும் அக்னிவேஷ் யார் என்பது தெரியவில்லையாம்.

பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் புதிதாக சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் இணைந்துள்ளார். லோனாவாலாவில் உள்ள ஒரு வீட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஏற்கனவே மாடல் ஷ்ரத்தா ஷர்மா, முன்னாள் மிஸ் ஆப்கானிஸ்தான் விதா சமத்சாய், பூஜா மிஸ்ரா, பூஜா பேடி, ஜூஹி பர்மார், ஷோனாலி நாக்ராணி, மெஹஹ் சஹால், லக்ஷ்மி நாராயண் த்ரிபாதி, அமர் உபத்யாய், ஆகாஷ்தீப் ஷேகல் மற்றும் சித்தார்த் பரத்வாஜ் தங்கி உள்ளனர். அந்த போட்டியாளர்களுடன் சுவாமி அக்னிவேஷ் இணைந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் அறிமுகம்

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த வீட்டிற்கு சென்ற அக்னிவேஷை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பூஜா பேடி மற்ற பங்கேற்பாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிற போட்டியாளர்கள் அனைவரும் கடந்த 3 மாதங்களாக இங்கு

தங்கியுள்ளனர். அவர்களில் லேட்டஸ்ட் சேர்க்கை அக்னிவேஷ் ஆவார். அவர் மற்றவர்களுடன் தங்காமல் தனி அறையில் தங்க வைக்கப்பட இருக்கிறார்.

வலுவான லோக் பால் இயக்கம் ஜனவரி 30-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன்பின்னர் ஊழலுக்கு எதிரான இயக்கம் நாடு முழுவதும் பரவியது. இளைஞர்களும் ஜன் லோக்பால் பில்லுக்கு ஆதரவாக திரண்டனர் என்று தெரிவித்தார். இந்த இயக்கத்தில் அன்னா குழுவில் முக்கியஸ்தராக இடம் பெற்றிருந்தவர் அக்னிவேஷ். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி விட்டார். மேலும் அரவிந்த் கேஜ்ரி்வாலிடம் அவர் கணக்கு கேட்டு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.

பெண்களுக்கான விழிப்புணர்வு

இருப்பினும் அக்னிவேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதன் மூலம் ஜன் லோக் பால் மசோதாவிற்கு ஆதரவான போராட்டத்திற்கு ஆதரவு பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்னிவேஷ் இன்றுதான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். சில தினங்கள் அவர் அங்கு தங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து கருத்து தெரிவித்திருந்த சுவாமி அக்னிவேஷ் சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் அவல நிலை குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தான் தான் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Social activist Swami Agnivesh made quiet a poetic entry into Bigg Boss house. Agnivesh was welcomed by all members of the house but, interestingly, not many members of the house knew who he was!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X