For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரூர் எஸ்.பி.யாக சந்தோஷ் குமார் பதவியேற்பு: குற்றச் செயல்களை குறைக்க உறுதி

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் எஸ்.பி.யாக சந்தோஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார்.

கரூர் எஸ்.பி.யாக இருந்த நாகராஜன் கடந்த 6ம் தேதி சென்னையில் உள்ள காவலர் பயிற்சி மையத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை மேற்கு போக்குவரத்து எஸ்.பி. யாக இருந்த சந்தோஷ்குமாரை கரூர் எஸ்.பி.யாக தமிழக அரசு நியமித்தது.

இதனையடுத்து கடந்த 20ம் தேதி கரூர் வந்த சந்தோஷ் குமார் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,கரூர் மாவட்டத்தில் குற்றச் செயல்களை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு வசதியாக போக்குவரத்து நெரிசல்கள் சரி செய்யப்படும் என்றார்.

2002ம் ஆண்டு ஐபிஎஸ் முடித்த சந்தோஷ் குமார் ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரைச் சேர்ந்தவர். அவர் தென்காசி, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்ட எஸ்.பி.யாக இருந்துள்ளார். இது தவிர அவர் மேலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Santhosh Kumar, a 2002 batch IPS officer, has taken charge as the Superintendent of Police, Karur district on friday. Earlier he was the deputy commissioner of Traffic West, Chennai city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X