For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டணங்கள் உயர்கின்றன: விமான பயணம் சாத்தியமற்று போகுமா?

By Shankar
Google Oneindia Tamil News

Airport Authority of India
டெல்லி: விமானத்தில் பயணிப்பது கூட இனிவரும் காலங்களில் சாத்தியமற்றுப் போகக் கூடும் சூழல் உருவாகியுள்ளது.

விமானங்களை நிறுத்துவதற்கு விமான நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் நிறுத்துமிடக் கட்டணத்தை குறைந்தபட்சம் இருமடங்கு அதிகரிக்க ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தக் கட்டணம் தொடர்பாக டெல்லி விமான நிலைய நிர்வாகம் மிகக் கூடுதலாக (774 சதவீதம்!) கட்டணத்துக்கு அனுமதி கேட்டிருந்தது. டெல்லி விமான நிலைய நிர்வாகத்தின் கோரிக்கையில் ஒரு பகுதி அளவுக்கு (334 சதவீதத்துக்கு) ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அனுமதி அளித்தது.

இதேபோல் கூடுதல் கட்டணத்தை வசூலிக்க மும்பை விமான நிலைய நிர்வாகமும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்படுமானால் தற்போதைய விமான கட்டணங்கள் அனைத்துமே இரு மடங்காக உயர்ந்துவிடும்.

இதனால் விமான நிறுவனங்கள் பெரும் இழப்புக்குள்ளாகவும் நேரிடும். ஏற்கெனவே தனியார் விமான நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் மத்திய அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரி வரும் நிலையில், இந்தப் புதிய நிலை விமான சேவை துறையில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா முடிவுக்கு தனியார் விமான நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

English summary
Flying is likely to become costlier this year as the Airports Authority of India is planning to demand that landing and parking charges for airlines be "at least" doubled. This comes close on the heels of the 774% hike sought by the
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X