For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் உள்ள ஈரான் அரசு சொத்துகளை முடக்க ஒபாமா உத்தரவு!

By Mathi
Google Oneindia Tamil News

Obama and Iran Presedent
வாசிங்டன்: அமெரிக்காவில் உள்ள ஈரான் அரசின் சொத்துகளை உடனே முடக்குமாறு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துக்கு எதிராக ஐ.நா. அந்நாடு மீது தடை விதித்தது. இருப்பினும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் மற்றொரு முகமாக வர்ணிக்கப்படும் இஸ்ரேலோ, ஈரான் மீது போர் தொடுக்கும் முனைப்புடன் உள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலின் போர் நிச்சயமாக அமெரிக்காவின் பொருளாதாரத்தில் கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒபாமா கருதுகிறார்.

இதனால் ஈரானை முடக்கி வைக்கும் நடவடிக்கைகளை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். அதன் ஒரு படியாக அமெரிக்காவில் இயங்கும் ஈரானின் மத்திய வங்கியின் செயல்பாட்டை முடக்க உத்தரவிட்டுள்ளார். திங்கள்கிழமை முதல் இத்தடை அமலுக்கு வந்துள்ளது.

ஈரானின் எண்ணைய் ஏற்றுமதி வர்த்தகத்தை தடை செய்வதன் மூலம் அந்நாட்டை பணிய வைக்க முடியும் என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கருதி வருகின்றன.

அமெரிக்காவுக்கு ஈரான் இன்னொரு ஈராக் ஆகுமா? இன்னொரு வியட்நாம் ஆகுமா? காலத்தின் கையில் பதில்....

English summary
US President Barack Obama has ordered the freezing of Iran's property under American jurisdiction, including that of the country's central bank, the White House said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X