For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாலத்தீவின் முன்னாள் அதிபர் எங்கு தான் இருக்கிறார்?

By Siva
Google Oneindia Tamil News

மாலே: மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நசீத் ஆதரவாளர்கள் நடத்திய் பேரணியின்போது போலீஸ் தடியடி நடத்தியதில் அவர் காயமைடந்தார். அதன் பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று அவரது உறவினர் தெரிவித்தார்.

மாலத்தீவில் நடந்த தொடர் போராட்டங்களால் அந்நாட்டு அதிபர் முகமது நசீத் கடந்த 7ம் தேதி பதவி விலகினார். இந்நிலையில் தான் துப்பாக்கி முனையில் பதவி விலகியதாகவும், மீண்டும் பதவிக்கு வரப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். நேற்று அவரது ஆதரவாளர்கள் நாட்டின் பல காவல் நிலையங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் நசீதை மீண்டும் அதிபராக்கக் கோரி அவர்கள் பேரணி நடத்தினர்.

அப்போது போலீசாருக்கும், முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் தாக்கி நசீத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் காயம் அடைந்தனர். இதையடுத்து நசீத் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தற்போது நசீத் பாதுகாப்பாக இருப்பதாக மாலத்தீவு அரசும், வீட்டில் இருப்பதாக அவரது உறவினர்களும் தெரிவிக்கின்றனர். மேலும் அவரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் குடும்பம் இலங்கையில் தஞ்சம் அடைந்துள்ளது என்றும் கூறப்படுகின்றது. ஆனால் இதை அரசு மறுத்துள்ளது.

நசீத் ஆதரவாளர்கள் மற்றும் தற்போதைய அதிபர் முகமது வாஹித் ஹஸனின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலால் தலைநகர் மாலே கலவர பூமியாக காட்சியளிக்கின்றது. இதற்கிடையே நசீதை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் நசீத் எங்கு தான் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

English summary
The Maldives' ex-president Mohamed Nasheed was injured during a rally and briefly hospitalised. While Maldives government is telling he is safe, his realtives are saying he is safe in home. But some people are telling he is missing. In the meanwhile, arrest warrant has been issued against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X