For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமராகும் வாய்ப்பு 2 முறை கிடைத்தும், மறுத்தேன்: சந்திரபாபு நாயுடு

By Siva
Google Oneindia Tamil News

chandrababu naidu
ஹைதராபாத்: தனக்கு பிரதமராகும் வாய்ப்பு 2 முறை கிடைத்தும் அதை ஏற்க மறுத்துவிட்டதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவி்த்துள்ளார்.

இது குறித்து அவர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

1990களில் பிரதமராகும் வாய்ப்பு என்னைத் தேடி இரு முறை வந்தது. ஆனால் அதை ஏற்க நான் தான் மறுத்துவிட்டேன். தேசிய அரசியலில் பங்கு வகித்தாலும் எனது கவனம் எல்லாம் ஆந்திரா மீது தான் உள்ளது. எனக்கும், தெலுங்கும் தேசம் கட்சிக்கும் ஆந்திரா தான் முக்கியம். எனது அனுபவம் மாநிலத்திற்கு உதவும். நான் மீண்டும் ஆந்திர முதல்வராகலாம்.

தேசிய அரசியலில் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பங்காற்றி வருகிறது. எங்கள் ஆதரவில் தான் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 6 ஆண்டுகள் பதவியில் இருந்தது. 1984ம் ஆண்டு லோக்சபாவில் பெரிய எதிர்கட்சியாக இருந்தோம்.

ஆந்திராவில் எங்கள் கட்சி ஆட்சியில் இருந்தபோது மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆந்திராவின் புகழ் எங்கள் ஆட்சியில் உலக அளவில் பரவியது. ஆனால் அதைப் பற்றி யாரும் தற்போது பேசாதது எனக்கு வேதனை அளிக்கிறது என்றார்.

English summary
There has been many occasions where politicians have uttered flattering statements and this time around Telugu Desam Party president N Chandrababu Naidu takes the cake hands down. He claimed on Feb 21 that he had two opportunities to become the Prime Minister earlier, but turned down the offer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X