ராமஜெயம் கொலை வழக்கு: வங்கி அதிகாரி, ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடம் விசாரணை

கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி காலை வாக்கிங் போன திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொலையாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இருப்பினும் இந்த வழக்கில் இதுவரை எந்தத் துப்புமே போலீசாருக்குக் கிடைக்கவில்லை. தூத்துக்குடி கவுன்சிலர் சாந்தி உட்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்திப் பார்த்துவிட்டனர். இன்னமும் குற்றவாளிகள் யார் என்று தெரியவில்லை.
ராமஜெயம் முதல் நாள் இரவே கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் சம்பவம் நடந்த அன்று காலை அவரைப் பார்த்ததாக பால்காரர் ஒருவரும், ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் தெரிவித்தனர். இதையடுத்து ராமஜெயம் 29ம் தேதி காலை தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியும், அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை திருச்சியில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர நெல்லையைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவரிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் ராமஜெயத்துடன் பண பரிமாற்றம் வைத்திருந்திருக்கிறார். ஆனால் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு விலகிவிட்டார். அதன் பிறகு அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் ராமஜெயம் கொல்லப்பட்ட அன்று அவர் நெல்லையில் இருந்துள்ளார். மேலும் மறுநாள் திருச்சிக்கு வந்து ராமஜெயத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்த அவர் எப்படி சரியாக கொலை நடந்த அன்று நெல்லையில் இருந்துள்ளார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமஜெயத்தைக் கொன்றது தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கூலிப்படை தான் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் வங்கி அதிகாரி நெல்லை தான் என்பதால் அவர் மீதான சந்தேகப் பார்வை வலுத்துள்ளது.
மற்றொரு தனிப்படை திருச்சி, மதுரை, சென்னை, கோவையில் ராமஜெயத்துடன் தொடர்பு வைத்திருந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. தனிப்படை தவிர திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவனமும் இந்த கொலை வழக்கை துப்பறிந்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications