For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க விமானத்தில் உள்ளாடையில் வெடிகுண்டு வைத்திருந்தவன் இங்கிலாந்தைச் சேர்ந்தவன் என கண்டுபிடிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க விமானத்தில் உள்ளாடைக்குள் வெடி குண்டை மறைத்து வைத்து கடத்திச் சென்ற தீவிரவாதி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவன் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்நாடு இதனை மறுத்துள்ளது.

ஏமனில் இருந்து அமெரிக்கா வந்த விமானத்தில் உள்ளாடைக்குள் வைத்து வெடி குண்டு கடத்தி வந்த அல்கொய்தா தீவிரவாதி ஒருவன் பிடிபட்டான். மெட்டல் டிடக்டரில் சிக்கத வகையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை நடுவானில் வெடிக்க செய்ய அவன் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. ஒசாமா பின்லேடனின் நினைவுதினத்தை ஒட்டி இத்தாக்குதலை அவன் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவன் பிடிபட்டதால் அந்த முயற்சி முயறிடிக்கப்பட்டுவிட்டது.

இருப்பினும் பிடிபட்ட தீவிரவாதி எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இங்கிலாந்தின் மத்திய கிழக்கில்தான் அவன் வசித்து வந்ததாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் இதனை திட்டவட்டமாக இங்கிலாந்து மறுத்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவன் இதேபோல் உள்ளாடைக்குள் மெட்டல் டிடக்டரால் கண்டுபிடிக்க முடியாத வெடிகுண்டை கடத்தி பிடிபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A British citizen played a central role in foiling the latest "underwear" bomb plot hatched in Yemen to attack a US-bound plane, as well as in the assassination of a top al-Qaida operative at the weekend, according to various sources in Washington.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X