For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி

Google Oneindia Tamil News

May Remembrance
கலிபோர்னியா: தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யபட்டோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் எஸ்.ஜே.இம்மானுவல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்பு ஈழத் தமிழர்களின் அரசியல் பங்களிப்பு குறித்து கருத்துப்பரிமாற்றம் நடைபெற்றது.

அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கைக் கவுன்சில் தலைவர் எலியஸ் ஜெயராஜ், சான்ஜோஸ் நகரசபை உறுப்பினர் ஆஷ் கார்லா ,அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதி மைக் ஹோண்டாஸ் , ருவாண்டா மக்களின் பிரதிநிதி வின்சென்ட் முகாபோ, ஆர்மேனிய மக்கள் பிரதிநிதி மற்றும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள், சமூக அமைப்பு பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

English summary
American Tamils came together to remember the victims of the Mullivaikkal massacre at California.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X