For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பாடா... அனலைக் கொட்டிய கத்திரி வெயில் காலம் முடிந்தது

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த கத்திரி வெயில் நேற்றோடு விடை பெற்றுவிட்டது. சென்னை நகரில் 100 டிகிரியைத் தாண்டி வெயிலின் உக்கிரம் உச்சமாக இருந்து வந்த நிலைமைக்கு இனி விடை கொடுத்தாச்சு.

கோடையின் உச்சக்கட்டம் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) கடந்த 4-ந் தேதி தொடங்கியது. நாள்தோறும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கும் குறையாத வெயில்தான்! சுள்ளென்று மண்டையை ஒருமாதமாக பிளந்துவந்தது அக்னி வெயில்! அதிகபட்சமாக 112 டிகிரி வரைக்கும் அக்னி தனது உக்கிர தாண்டவத்தை வெளிப்படுத்தியும் இருந்தது!

கோடை மழையால் சில பகுதிகள் ஆறுதலடைந்த போதும் அக்னிக்கு எந்த பகுதியும் தப்பவில்லை. அக்னி முடிவடைந்துவிட்ட நிலையில் இன்னும் சில நாட்களுக்கு வெப்பம் நீடிக்க வாய்ப்பிருக்கிறது என்றே கூறப்படுகிறது.

சென்னைய்ல் நேற்று 109 டிகிரி வெயில் பதிவானது. வேலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டியே இருந்தது.

English summary
The last day of the peak summer season saw mercury levels soar to a season high of 42.5 degree Celsius in the city. While Kathiri season ended on Monday, the meteorological department expects the heat wave to continue for a few more days till the southwest monsoon sets over Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X