For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வக்பு வாரிய உறுப்பினர் விவகாரம்: அமைச்சர் முகம்மது ஜானுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: வக்பு வாரிய உறுப்பினர் குறித்த விவகாரத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான், அரசுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

வக்பு வாரியம், கோடிக்கணக்கான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதற்கான உறுப்பினர்களாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான், எம்.எல்.ஏ. அப்துல்ரகீம், எம்.பி.க்கள் ஆரோன் ரஷீத், அமீர் அலி ஜின்னா மற்றும் தமிழ்மகன் உசேன், பாரூக், தலைமை ஹாஜி (சன்னி) சலாஹுதீன் அப், தலைமை ஹாஜி மெஹ்திகான் ஆகிய 8 பேரை நியமித்து 15.6.12 அன்று தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நியமனத்தில் விதிமுறைகளைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் சரியாகப் பின்பற்றவில்லை. இதனால் தகுதியில்லாதவர் கூட உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றாமல் உறுப்பினர்களை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கான பதில் மனுவை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்யுமாறு அமைச்சர் முகம்மது ஜான், அரசுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
Chennai high court order to send notice to TN minister Mohammed John to answer about the member selection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X