10 ஆண்டுகள் கழித்து குவான்டானமோ சிறையில் இருந்து ஒசாமா டிரைவர் விடுதலை

Posted By:
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் டிரைவர், சமையல்காரராக இருந்த இப்ராகிம் அல் கோசி அமெரி்ககாவில் உள்ள குவனாடனமோ சிறையில் இருந்து 10 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் டிரைவர், சமையல்காரராக இருந்தவர் இப்ராகிம் அல் கோசி(52). அவர் கடந்த 1996ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் சென்று தீவிரவாத அமைப்புகளுக்காக பணிபுரிய ஆரம்பித்தார். பின்னர் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் தீவிரவாத பயிற்சி மையத்தில் உள்ளவர்களுக்கு உணவு சமைத்து போடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வந்தார்.

இந்நிலையில் அவர் கடந்த 2002ம் ஆண்டு கைது செய்யப்பட்டு அமெரி்க்காவில் உள்ள குவான்டானமோ சிறையில் அடைக்கப்பட்டார். அல் கொய்தா தீவிரவாதிகளுக்காக அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட குவான்டானமோ சிறையில் ஆரம்பகாலத்தில் அடைக்கப்பட்டவர்களில் கோசியும் ஒருவர். தீவிரவாதிகளுக்கு உதவியதை அவர் ஒப்புக் கொண்டதையடுத்து அவரது தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் இருந்த கோசியை அமெரிக்கா விடுதலை செய்தது. இதையடுத்து அவர் சூடானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தனது குடும்பத்தாருடன் வசிக்கவிருக்கிறார். அவர் விடுவிக்கப்பட்டாலும் அவரது செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

குவான்டானமோ ராணுவச் சிறையில் 700 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். தற்போது கோசி விடுதலைக்குப் பிறகு அந்த சிறையில் 168 பேர் உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Slained Al Qaeda leader Osama bin Laden's former servant has been released from Guantanamo Bay Naval Base after spending ten years there for aiding terrorism.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற