For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது

By Chakra
Google Oneindia Tamil News

Petrol Pump
டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருப்பதாலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதாலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகலாம்.

இரு வாரங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 116 டாலராக இருந்தது. அது கடந்த 20ம் தேதி 106.74 டாலராக குறைந்துள்ளது.

மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசு அதிகரித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவாகும் டாலரின் அளவும் குறைந்துள்ளது.

இந்தக் காரணங்களால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Oil marketing companies (OMCs) may decide to cut petrol prices by up to Rs 2 per litre in next 2-3 days due to falling international crude oil prices and a strengthening rupee. New York's main contract, light sweet crude for November, was at USD 92.28 a barrel on Friday and Brent North Sea crude for delivery in November was at USD 112.15. The Indian basket of crude oil fell to USD 106.74 on September 20 from USD 116 five days earlier, according to data published by the Oil Ministry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X