For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்சீனக் கடலை உரிமை கோரி புதிய ‘மேப்’ வெளியிட்ட சீனா

By Mathi
Google Oneindia Tamil News

South China Sea
பெய்ஜிங்: சீனாவையொட்டிய தென்சீன கடற்பரப்பும் கிழக்கு சீனக் கடற்பரப்பும் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை தொடர் கதையாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் தென்சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தீவுகள அனைத்துமே தங்கள் நாட்டுக்கே உரியவை என்று சொந்தம் கொண்டாடி புதிய வரைபடம் ஒன்றை சீனா உருவாக்கி இருப்பது பெரும் சர்ச்சையை மீண்டும் கிளப்பிவிட்டிருக்கிறது.

1947-ம் ஆண்டு சீனாவின் தேசிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் புதிய யூ வடிவிலான மேப் என்று சீனா கூறியுள்ளது. இதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தங்களிடம் முந்தைய கால வரைபடங்கள், வரலாற்று ஆவணங்கள் இருப்பதாகவும் அதன் மூலமே தென்சீனக் கடற்பரப்பு தங்களுக்கே உரித்தானது என்று உரிமை கோருவதாகவும் சீனா கூறியுள்ளது.

ஆனால் சீனா வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் மோதலை உருவாக்கியே தென்சீனக் கடல் பரப்பு தீவுகளை சீனா ஆக்கிரமித்துவிட்டு இப்போது வரலாற்றுக்கால உரிமை என பேசுவது தவறானது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தென்சீனக் கடற்பரப்பை யுத்தக் களமாக வைத்திருப்பதுதான் சீனாவின் நோக்கமோ?

English summary
Beijing’s claims to nearly all the South China Sea are embossed in its latest passports, based on what it calls long-established ‘historical facts’ and what Chinese analysts say is Western imperial precedent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X