For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைசிறந்த பொருளாதார வல்லுநர்- மன்மோகன்சிங்குக்கு பாஜக’பங்காளி’அகாலி தளம் பாராட்டு!

By Mathi
Google Oneindia Tamil News

லூதியானா: உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் பிரதமர் மன்மோகன்சிங் என்று பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான அகாலி தளத்தின் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ்சிங் பாதல் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

Manmohan singh
பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ்சிங் பாதல், சொந்த மாநிலத்தில் நடைபெறும் விவசாய பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு பிரதமர் வருகை தந்திருக்கிறார். அவர் கலந்து கொள்வதை பெருமையாகக் கருதுகிறேன். உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் பிரதமர் மன்மோகன்சிங். இந்த விழாவில் மன்மோகன்சிங்கிடம் பட்டம் பெறுவோர் அதிர்ஷ்டசாலிகள் என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்மோகன்சிங் பேசுகையில், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை பஞ்சாப் விவசாயிகள் சங்கங்கள் ஆதரிக்கின்றன. அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும். இது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நன்மை தரக் கூடியதே என்றார் அவர்.

English summary
A day after winning Parliament's approval to the decision of allowing FDI in retail, Prime Minister Manmohan Singh today said the move will benefit farmers and consumers and help introduce new technologies in agri marketing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X