For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல் தலையெழுத்தை மாற்றியமைக்குமா குஜராத் தேர்தல் முடிவு?-இன்று வாக்கு எண்ணிக்கை

Google Oneindia Tamil News

Narendra Modi
அகமதாபாத்: குஜராத் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. கூடவே இமாச்சல் பிரதேச வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு குஜராத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றால் அது தேசிய அளவில் எத்தகைய பின்விளைவுகளை, மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் காத்துள்ளனர்.

டிசம்பர் 13 மற்றும் 17 ஆகிய இரு நாட்களில் இரண்டு கட்டமாக குஜராத் சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. இரு வாக்குப் பதிவிலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் மோடி அரசுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் கூட இதையே சொல்கின்றன.

வழக்கமாக ஒரு தேர்தலில் அதிக அளவிலான வாக்குப்பதிவு நடைபெற்றால், அரசுக்கு எதிரான வாக்காகவே அது பார்க்கப்படும், பதிவாகும். இதுதான் இதுவரை இருந்து வந்துள்ள வரலாறு. ஆனால் இது குஜராத்தில் முற்றிலும் மாற்றியமைக்கப்படவுள்ளதாக பரவலாக கருத்து நிலவுகிறது.

மோடி தலைமையிலான பாஜக இன்றைய தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றால் அது புதிய சாதனையாக, இந்திய அரசியலில் புதிய அத்தியாயமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், தேசிய அளவிலும் இந்த வெற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என்று...!

English summary
Today, lot of new definitions, meanings and words will take birth and the person responsible for such developments will be Gujarat Chief Minister Narendra Modi. Gujarat election results are going to be declared today (Dec 20).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X