For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“நிதி கொடுக்காட்டி பிரதமரை போய் அடிக்கவா முடியும்?”.... கொந்தளிக்கும் மம்தா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Mamata Banerjee
கொல்கத்தா: "மாநிலத்திற்கு நிதி ஒதுக்குங்கள் என்று பிரமரிடம் முறையிடத்தான் முடியும். அவர் ஒதுக்காவிட்டால் அதுக்காக அடிக்கவா முடியும்?" என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 75 கி.மீட்டர் தொலைவில் உள்ள கேன்னிங் என்ற இடத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பங்கேற்று பேசினார். அப்போது, மத்திய அரசில் இருந்து விலகும் முன் சமையல் கேஸ் சிலிண்டர் எண்ணிக்கை, அன்னிய நேரடி முதலீடு ,உரவிலை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நான் 10-க்கும் மேற்பட்ட முறை சந்தித்து வலியுறுத்தினேன். இதற்காக டில்லியில் எனது கட்சி எம்.பி.க்களுடன் ஆர்ப்பாட்டமும் நடத்தினேன் ஆனால் எந்த பலனும் இல்லை.

அதேபோல் மேற்கு வங்காள மாநிலத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கித் தருமாறு கேட்டு, பிரதமர் மன்மோகன் சிங்கை கடந்த 2010ம் ஆண்டிலிருந்து இதுவரை குறைந்தது 10 முறையாவது நான் சந்தித்துள்ளேன்.இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும்? அவரை என்னால் அடிக்கவா முடியும்?. அப்படி செய்தால் மக்கள் என்னை ரவுடி என்றுதான் அழைப்பார்கள். ஆனால், என் மாநில மக்களின் நன்மைக்காக இந்த விவகாரத்தில் இறுதிவரை போராடிப் பார்ப்பேன்"என்று ஆவேசமாக பேசினார் மம்தா பானர்ஜி.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மன்மோகன்சிங் என்னை கோபக்காரியாக மாற்றிவிட்டார் இனி மேற்குவங்க மக்களுக்காக டில்லி வீதிகளில் தொடர் போராட்டம் நடத்தப்போகிறேன். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் அரசு முடிந்தவரை மாநிலத்தில் நிறைவேற்றி வருகிறது என்றும் மம்தா தெரிவித்தார்.

English summary
Stepping up her anti-Centre tirade, West Bengal Chief Minister Mamata Banerjee today said she had met Prime Minister Manmohan Singh several times to protest against the hike in fertiliser prices but to no avail.”I have met PM ten times. I cannot do more than this. Shall I go and beat (him up)? Then you will say I have become a goonda.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X