For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்ரேல் பார்லிமெண்ட் தேர்தல்- பிரதமர் நெதன்யாகு கட்சி மீண்டு ஆட்சி அமைக்கிறது?

By Mathi
Google Oneindia Tamil News

Benjamin Netanyahu
ஜெருசலம்: ஈரான் மற்றும் பாலஸ்தீனத்துடனான மோதல் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலில் இன்று பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலிலும் தற்போதைய பிரதமர் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு அமையக் கூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கிறது என்று குற்றம்சாட்டி போர் முஸ்தீபுகளில் முனைப்பு காட்டியது இஸ்ரேல். இதேபோல் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை காசா பகுதிகளில் உக்கிரமான தாக்குதலை நடத்தி பலநூறு பாலஸ்தீனர்கலை படுகொலை செய்திருந்தது இஸ்ரேல். இவை அனைத்துமே இஸ்ரேலின் பொதுத் தேர்தலை மையப்படுத்திய நடவடிக்கைகள் என்று கூறப்பட்டு வந்தது.

அந்த பொதுத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. மொத்தம் 120 இடங்களுக்கான இந்தத் தேர்தலில் 38 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. தற்போதைய தேர்தலிலும் பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

நெதன்யாகு தலைமையிலான அரசு மீண்டும் அமைந்தால் ஈரானுடனான மோதல் போக்கும் பாலஸ்தீனத்துடனான யுத்த நடவடிக்கைகயும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.

English summary
Israelis have begun voting in a general election, with opinion polls suggesting PM Benjamin Netanyahu will return to office but with a reduced majority.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X