For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவண்ணாமலை அருகே சிறுவர்களை கடத்திய போர்வெல் லாரி உரிமையாளர் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வேலைக்கு வரவில்லை என்று கூறி இரண்டு சிறுவர்களை காரில் கடத்திச் சென்ற போர்வெல் உரிமையாளரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் விக்னேஷ் (16) பள்ளிக்கு செல்லாமல் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள போர்வெல் கம்பெனியில் கூலி வெலை செய்து வந்தார்.

கடந்த பொங்கல் பண்டிகைக்காக விக்னேஷ் கீழ்கல்பட்டு கிராமத்துக்கு வந்துள்ளார். அதன்பின் விக்னேஷ் மீண்டும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் பெருந்துறையில் உள்ள போர்வெல் உரிமையாளர் சர்மா (26) என்பவர் காரில் கீழ்கல்பட்டு கிராமத்துக்கு நேற்று முன்தினம் விக்னேஷை தேடி வந்தார்.

அப்போது நஞ்சு கொண்டாபுரம் கிராமம். இந்த கிராமத்தைச் மணி என்பவரது மகன் சுரேஷ் உடன் விக்னேஷ் பேசிக்கொண்டிருந்தார். அதைக் கண்ட சர்மா "ஏன் வேலைக்கு வரவில்லை?" என விக்னேஷிடம் கேட்டுள்ளார்.

சம்பளமும் கொடுப்பதில்லை, சாப்பாடும் போடுவதில்லை எனவேதான் நான் வேலைக்கு வரவில்லை என விக்னேஷ் கூறியுள்ளான். இதில் ஆத்திரமடைந்த சர்மா விக்னேஷையும், சுரேஷையும் காரில் தூக்கி போட்டு கடத்த முயன்றார்.

இதனால் திகைத்த மாணவர்கள் கூச்சல் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு மணி, குப்பன் ஆகியோர் ஓடிவந்து மகன்களை மீட்க முயன்றனர். அதற்குள் சர்மா வேகமாக காரை எடுத்து சென்று விட்டார்.

இதுகுறித்து மணி கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் சிறுவர்களின் பெற்றோர்கள் புகார் கொடுத்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்து சிறுவர்களைக் கடத்திய சர்மவையும், கடத்தப்பட்ட சிறுவர்களையும், காரின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் தேடினர்.

அதே பதிவு எண் கொண்ட கார் வேலூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் சென்ற காரை மடக்கிய போலீசார் சிறுவர்களை மீட்டனர். சிறுவர்களை கடத்திய சர்மாவை கைது செய்த போலீசார் கரை பறிமுதல் செய்தனர்.

English summary
A Borewell lorry owner was arrested for kidnapping children near Thiruvannamalai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X