For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய விமானப்படை வீரர்களின் கோழைத்தனம்: விசாரிக்கக் கோரும் உள்துறை அமைச்சகம்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் சுட்டதில் படுகாயமடைந்த போலீஸ்காரரையும், ஹெலிகாப்டர் மற்றும் ஆயுதங்களை விட்டுவிட்டு ஓடிய இந்திய விமானப்படையைச் சேர்ந்த 6 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள டிமில்வாடாவில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த தாக்குதலில் 2 போலீசார் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இந்திய விமானப்படையைச் சேர்ந்த 6 பேர் ஒரு ஹெலிகாப்டரில் டிமில்வாடா வந்தனர்.

அவர்கள் ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது மாவோயிஸ்டுகள் சுட்டதில் 19 குண்டுகள் அதில் பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் தரையில் விழுந்தது. அப்போது மாவோயிஸ்டுகள் சுட்டதில் ஹெலிகாப்டரில் இருந்த வயர்லஸ் ஆபரேட்டரான போலீஸ்கார் மீது குண்டு பாய்ந்தது. ஆனால் 2 பைலட்டுகள் மற்றும் 2 கமாண்டோக்கள் என மொத்தம் 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டனர்.

அவர்கள் காயமடைந்த போலீஸ்காரரை தவிக்கவிட்டு, ஹெலிகாப்டர், எந்திர துப்பாக்கி மற்றும் சாதாரண துப்பாக்கியையும் அங்கேயே விட்டுவிட்டு ஓடினர். இந்த சம்பவம் குறித்து கடந்த மாதம் 30ம் தேதி உள்துறை செயலாளர் ஆர். கே. சிங் பாதுகாப்புத் துறை செயலாளர் சஷி காந்த் சர்மாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில் டிமில்வாடா சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் குண்டடிபட்ட போலீஸ்காரரை விட்டுவிட்டு ஓடிய இந்திய விமானப்படையைச் சேர்ந்த 6 பேர் மீது உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

English summary
Home ministry has asked the defence ministry to take appropriate action against 6 IAF personnels who abandoned an injured state police wireless operator after their chopper crash landed in Maoist heartland in Chattisgarh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X