For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடருகிறது செம்மொழித் தமிழாய்வு நிறுவன பணியாளர்களின் போராட்டம்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பணியாளர்கள் போராட்டம் தொடர்கிறது.

இது தொடர்பாக பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆரோக்கியதாசு கூறுகையில், செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி முதல் கருப்பு வில்லையணிந்து கொண்டு போராட்டம் தொடங்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு முதல் உயர்த்தப்படாமலிருக்கும் 72% ஊதிய உயர்வை முன் தேதியிட்டு உடனே வழங்க வேண்டும்., பல்லாண்டுகளாகப் பணியாளர்களைத் தினக்கூலிகளாகவே வைத்திருக்கும் பேரவல நிலையை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும், இந்நிறுவனத்தில் ஓய்வுபெற்றவர்களைத்தவிர நிரந்தரப்பணிக்கு முழுத் தகுதியுடன் இங்கு பல்லாண்டுகளாகப் பணியாற்றிவரும் பணியாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பிச்சையெடுக்கும் போராட்டத்தை நடத்தினோம். நாளை தெய்வத்திடம் முறையிடும் போராட்டம்' நடைபெறுகிறது என்றார் அவர்.

English summary
Central Institute of Classical Tamil staffs protest continued for their demand
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X