For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரியோடி ஜெனீரோ கார்னிவல்... கலக்கல் ஆட்டம் போட்ட சம்பா பள்ளிக்கு சாம்பியன் பட்டம்

Google Oneindia Tamil News

ரியோ டிஜெனீரோ: பிரேசிலின் ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த 2013ம் ஆண்டு கார்னிவல் விழாவின்போது சிறந்த சம்பா நடனத்தை வெளிப்படுத்திய விலா இசபெல் சம்பா பள்ளிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.

ரியோ நகரில் ஆண்டுதோறும் நடக்கும் இந்த கார்னிவல் எனப்படும் வசந்தோற்சவ விழா வெகு பிரபலமானது. இந்த விழாவின்போது பிரேசிலின் பாரம்பரிய நடனமான சம்பா நடனத்தை ஆடியபடி அழகிகள் ஊர்வலம் போவார்கள். விழாவின் இறுதியில் சிறந்த முறையில் நடனம் ஆடியவர்களுக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இதை தட்டிச் செல்ல அங்கு கடும் போட்டியே நடக்கும். பல்வேறு சம்பா பள்ளிகள் சார்பிலும் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டும் சிறந்த முறையில் சம்பா நடனப் போட்டி நடைபெற்றது. இறுதியில், விலா இசபெல் சம்பா பள்ளிக்கு சாம்பியன் பட்டம் கிடைத்தது.

40 பேர் கொண்ட நடுவர்கள்

40 பேர் கொண்ட நடுவர்கள்

கார்னிவலின்போது நடைபெறும் சம்பா நடனங்களைப் பார்க்க 40 நடுவர்கள் கொண்ட குழு அமர்ந்திருந்தது. இவர்கள் ஒவ்வொரு நடனத்தையும் பார்த்து ஓட்டுப் போட்டு வெற்றியாளரைத் தேர்வு செய்தனர்.

3 வது முறையாக பட்டம்

3 வது முறையாக பட்டம்

இந்த ஆண்டுக்கான பட்டத்தை வென்ற விலா இசபெல் சம்பா பள்ளி கடந்த 65 ஆண்டு கால கார்னிவல் வரலாற்றில் 3வது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

கடும் போட்டிக்கு மத்தியில் சாம்பியன்

கடும் போட்டிக்கு மத்தியில் சாம்பியன்

விலா இசபெல் பள்ளிக்குக் கடும் போட்டியாக பெஜா புளோர் என்ற சம்பா பள்ளி விளங்கியது. இப்பள்ளிக்கு 299.4 புள்ளிகள் கிடைத்தன. ஆனால் விலா பள்ளிக்கு 299.7 புள்ளிகள் கிடைத்தால் அது வெற்றி பெற்று விட்டது.

நடனம், இசை, கிரியேட்டிவிட்டி

நடனம், இசை, கிரியேட்டிவிட்டி

வெறும் டான்ஸ் மட்டும் இங்கு தகுதியாக பார்க்கப்படுவதில்லை. மாறாக, இசை, கிரியேட்டிவிட்டி, கலைநயம் உள்ளிட்டவற்றையு் நடுவர்கள் பார்த்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3800 சம்பா டான்ஸர்கள்

3800 சம்பா டான்ஸர்கள்

இந்த ஆண்டு விழாவின்போது மொத்தம் 3800 சம்பா டான்ஸர்கள் கலந்து கொண்டனர். மேலும் 7 பிரமாண்ட அலங்கார ஊர்திகளும் கலந்து கொண்டன. 72,000 பேர் அமர்ந்து பார்வையிடக் கூடிய சம்பாடிரோமில் இந்த கண்கவர் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

9 லட்சம் பேர் வருகை

9 லட்சம் பேர் வருகை

இந்த சம்பா விழாவைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து 9 லட்சம் பேர் ரியோவுக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து நாட்கள் இந்த விழா நடந்தது.

English summary
The Vila Isabel samba school was crowned champion of the 2013 Rio Carnival on Wednesday for its parade highlighting Brazil's agricultural might as "the world's breadbasket." In a feverishly awaited verdict, a 40-member jury gave the Rio school, considered a cradle of samba music in Brazil, the third title of its 65-year-old history.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X