For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரன் மகன் படுகொலை குறித்த சானல் 4 படம் பொய்யானது - சொல்கிறது இலங்கை

Google Oneindia Tamil News

டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை சிங்கள ராணுவக் காடையர்கள் மிகக் கொடூரமாக சாப்பிட வைத்து சுட்டுக் கொன்ற செயல் உலகெங்கும் மனிதர்களைப் பதற வைத்துள்ள நிலையில் இந்தப் படத்தை பொய்யானது, ஜோடனையானது என்று வாய் கூசாமல் பொய் பேசியுள்ளது இலங்கை.

பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் குறித்த தகவல் நெடு நாட்களுக்குத் தெரியாமலேயே இருந்து வந்தது. இந்தநிலையில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு பாலச்சந்திரன் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.மேலும் வெற்று உடலுடன் அவனது மார்பில் குண்டு பாய்ந்த அடையாளங்களுடன் அவனது புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

SL says Channel 4's images are wrong
இந்தநிலையில் மிகக்கொடூரமான முறையில் ஈவு இரக்கமே இல்லாமல் சிங்கள ராணுவ மிருகங்கள், பாலச்சந்திரனை பாயிண்ட் பிளாங்க்கில் வைத்துக் கொன்ற செயலை தற்போது சேனல் 4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.மேலும் பாலச்சந்திரனை சாப்பிட வைத்து பின்னர் கொன்ற செயலையும் அது அம்பலப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்தப் புகைப்படங்கள் பொய்யானவை என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவாசம் கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,உள்நோக்கத்துடன் லண்டனில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்குப் பின்னால் விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் இருக்கின்றன.

இந்த குற்றச்சாட்டில் புதிதாக எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல் ஏதுமில்லை. இலங்கை அரசு மீது இதுபோன்ற ஆதாரமற்ற குற்றங்கள் கூறுவது வாடிக்கையாகிவிட்டது என்றார்.

English summary
Sri Lanka has said that the images of LTTE Chief Prabhakaran's son Balachandran, released by channel 4 are wrong and doctored.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X