For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊசி போட்டுக்க பயமா? இனி தேவையில்லை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Injection
சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைக்கு ஊசி போட்டுக்கொள்வது என்றாலே அஞ்சுகின்றனர். ஊசிக்கு பதிலாக மாத்திரை மட்டும் போதும் என்று கேட்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். டானிக் போதுமே என்று மருத்துவர்களிடம் கெஞ்சுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஊசி போட்டுக்கொண்டால் வலிக்குமே என்ற பயத்தினால்தான் சிலர் மாத்திரை, டானிக் என்று மாறிவிடுகின்றனர்.

மருந்து, மாத்திரைகளை விட ஊசிதான் உடனடி நிவாரணம் கிடைக்கும். ஊசி மருந்து உடம்பில் செலுத்திய சில நொடிகளில் நரம்பின் வழியாக உடம்பின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று உடனே அதன் வேலையை காட்டத் தொடங்கும். இதனால்தான் வலியில்லாத ஊசியை இப்போது கண்டுபிடித்துள்ளனர் லண்டன் கிங் கல்லூரி மருத்துவர்கள்.

இந்த புதிய வகை ஊசியை உலர்ந்த சர்க்கரை மூலம் கண்டுபிடித்திருக்கின்றனர். இது ஒரு நெற்றி பொட்டு அளவுக்குதான் இருக்கும், கூடவே இதில் உங்கள் நோய்க்கேற்ற மருந்து இருக்கும் இதை அப்படியே உடம்பில் ஒட்டி விட்டால் போதும். இதில் உள்ள உலர்ந்த சர்க்கரை உருகி உடம்போடு சென்று இந்த மருந்தை கொஞ்சமும் வலியில்லாமல் செலுத்த ஏதுவாகும்.

இதை காச நோய், எயிட்ஸ், மலேரியா போன்ற நோய்களுக்கு உபயோகபடுத்த முடியும். இதன் மூலம் தொற்று வியாதி மற்றும் எயிட்ஸ் பயம் வேண்டாம்...

இந்தியாவில் இந்த ஊசி அறிமுகப்படுத்தும் போது யாரும் ஊசி போட்டுக்கொள்ள பயப்பட மாட்டார்கள்தானே.

English summary
A team at King’s College, London, were able to create a micro-needle array using dried sugar. The micro-needle array is a tiny disc which penetrates the skin. A HIV vaccine was proposed on the dried sugar, which dissolved after being inserted into the skin and got effectively delivered. This method took years of research across the globe and it could lower the cost of manufacturing and transportation of vaccinations. Also the risk of transmitting diseases through needles and syringes would be lowered. The team is positive about using this method to vaccinate against HIV, malaria and tuberculosis in the years to come.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X