அத்தியாவசியப் பொருளான செல்போன்… 68% இந்தியர்கள் அடிமை!

ஆசிய பசிபிக் நாட்டு மக்களில் இந்தியர்கள் தான் செல்ஃபோனுக்கு அதிக அளவு அடிமையாகி இருப்பதாக கூறுகிறது இந்த ஆய்வு அறிக்கை.
நார்ட்டன் என்ற நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்தன.
தீ விபத்து ஏற்படும் போது, ஏதாவது இரண்டு பொருட்களை மட்டும் எடுத்துச் செல்ல கூறினால், அதில் ஒன்றாக செல்ஃபோனை தேர்வு செய்வேன் என்று 43 சதவீத இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பணம் செலுத்தவும், பல்வேறு சேவைகளுக்கும் செல்ஃபோனின் பாதுகாப்பான கட்டண முறைகளை 65 சதவீதம் பேர் பயன்படுத்துவதும் இந்த ஆய்வில் தெரிய வந்தது.
79 சதவிகிதம் பேர் டவுன்லோட் செய்யவும், பாடல் கேட்கவும், சொந்தத் தகவல்களைப் பதிந்து கொள்ளவும் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
ஆசிய பசிபிக் நாடுகளில் வாழும் மக்களில், இந்தியர்கள் மட்டுமே 68 சதவீதம் வரை செல்ஃபோன் தவிர்க்க இயலாதது என்ற நிலைக்கு உள்ளாகி, கிட்டத்தட்ட, அதற்கு அடிமையாகி இருப்பதாகவும் நார்ட்டன் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.