For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் 3மாதத்தில் 359 கற்பழிப்பு வழக்குகள் … அதிர்ச்சியில் இளம்பெண்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Delhi records huge spike in cases of rape and molestation
டெல்லி: டெல்லியில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 359 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை இருமடங்காகி உள்ளது என்று அதிர்ச்சியடைந்துள்ளனர் பெண்கள்.

தேசிய குற்றப்பதிவேடு துறை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் இளம் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

2012ல் பதிவான பாலியல் வழக்குகள்

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களிடையே பெண்களுக்கு எதிரான 143 கற்பழிப்பு வழக்குகள், 113, மானபங்க வழக்குகள் பதிவாயின.

பலாத்கார வழக்கு இருமடங்கானது

இந்த வருடம் ஜனவரி - மார்ச் கட்டங்களில் 359 பாலியல் பலாத்கார வழக்குகளும், 794 மானபங்க வழக்குகளும் பதிவாகியுள்ளன.

மானபங்க வழங்கு 6 மடங்கு

கடந்த ஆண்டைவிட பாலியல் பலாத்கார வழக்குகள் இருமடங்கை விட அதிகமாக பதிவாகியுள்ளது. அதேபோல் மானபங்க வழக்குகள் 6 மடங்கை காட்டிலும் அதிகமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2010ல் 706 பலாத்கார வழக்கு

கடந்த 2010-ம் ஆண்டு 706 கற்பழிப்பு வழக்குகள் பதிவானதே கடந்த 10 வருடங்களில் அதிகபட்ச அளவாக இருந்து வந்தது. இப்போது அதை மிஞ்சும் வகையில் மூன்றே மாதங்களில் 359 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளது.

கடத்தல், கொள்ளை அதிகம்

கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களும் இந்த மூன்று மாதத்தில் அதிகமாக பதிவாகியுள்ளன. 1040 கடத்தல் வழக்குகளும், 453 கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவி உயிரிழப்பு

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்தது. இதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் இளம் தலைமுறையினர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் தலைநகரம் ஸ்தம்பித்தது. அப்பொழுது டெல்லி போலீசார் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தனர்.

24 மணிநேரம் தொலைபேசி சேவை

அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் பொருட்டும், டெல்லியில் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டும் 24 மணி நேர டெலிபோன் சேவையும், புதிய ரோந்து வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு குறித்த அச்சம்

எனினும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் பலாத்கார சம்பவங்களும் குறைந்த பாடில்லை. தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டெல்லி பெண்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

English summary
Reports of rape in Delhi have more than doubled between January and March this year as compared with the same period last year, according to the Delhi Police.Reports of rape in Delhi have more than doubled between January and March this year as compared with the same period last year, according to the Delhi Police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X